பேஸ்புக்கில் சுயவிவரங்களை பகிர வற்புறுத்தும் வாட்ஸ் அப்; ‘சிக்னல்’ செயலியைப் பயன்படுத்த எலோன் மஸ்க் பரிந்துரை

பேஸ்புக்கில் சுயவிவரங்களை பகிர வற்புறுத்தும் வாட்ஸ் அப்; ‘சிக்னல்’ செயலியைப் பயன்படுத்த எலோன் மஸ்க் பரிந்துரை

வாட்ஸ் அப்-க்குப் பதில் சிக்னல் செயலியை பயன்படுத்த எலோன் மஸ்க் பரிந்துரை

வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக்கில் பதிவிட வற்புறுத்தி வருகிறது.

 • Share this:
  வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக்கில் பதிவிட வற்புறுத்தி வருகிறது. இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் போன்ற என்கிரிப்டட் செயலிகளை பயன்படுத்துமாறு உலகின் நம்பர் 1 பணக்காரரான டெல்ஸா நிறுவன அதிபர் எலோன் மஸ்க் பரிந்துரை செய்துள்ளார்.

  புதன் கிழமையன்று வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை முகநூல் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது.

  பிப்ரவரி 8ம் தேதிக்குள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் செயலியில் நுழைய முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியேறி சிறிய செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது.

  இது தொடர்பாக டெக்கிரஞ்ச் எடிட்டர் மைக் பட்சர் கூறும்போது, “சிக்னல், டெலிகிராம் ஆகிய செயலிகள் இப்போது சிறந்த மாற்று செயலிகளாக இருக்கின்றன” என்று கூறி பேஸ்புக் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் சி.இ.ஓ. பெசாஸை முந்திய டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

  2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: