எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து உதிரிபாக தயாரிப்பாளர்களை நமது நாட்டில் கடையை அமைக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) பிரதமருக்கு ஜூன் 23 அன்று அனுப்பிய ஒரு கடிதத்தில், உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் மற்றும் பிற ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில்துறைக்கு செலுத்த வேண்டிய அனைத்து ஊக்கத்தொகைகள் மற்றும் நிலுவைத் தொகைகளை "உடனடியாக செலுத்த வேண்டும்" என்றும் கோரியுள்ளது.
மேக் இன் இந்தியா, தன்னிறைவு பாரதம் என்ற திட்டங்கள் மூலம் இந்தியாவில் தொழில் துறையை மேம்படுத்தி இதை தொழில் முனையம்(hub) ஆக மாற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது. உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை மூலம் தொழில்களுக்கு சலுகைகளும் மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடிதத்திற்கு விளக்கமளித்த ICEA தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ "தொழில் தொடங்கும் சூழலை உருவாக்கவும், முதலீடுகளை உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், திறன் மேம்பாட்டை எளிதாக்கவும், மேம்படுத்தவும் உதவும் நிறுவனங்களை மாற்றுவதற்கு வசதியாக, 2020 இல் FDI கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
புதிய EV யூனிட் மூலம் 2027-க்குள் 30 சதவீதம் எலெக்ட்ரிக் SUV-க்களை விற்க திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்.!
உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை (GVCs) அவற்றின் தொழில்சூழல்களுடன் இந்தியாவுக்கு மாற்றுவதற்கான கொள்கையில் தெளிவு இல்லாதது, அதை முன்னெடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகளை பாதிக்கலாம் என்றும் கூறினார்.
நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கான இந்தியாவின் FDI கொள்கை ஏப்ரல் 17, 2020 அன்று திருத்தப்பட்டது. தேவையான ஒப்புதல்களுடன் அரசாங்க வழியின் மூலம் மட்டுமே உள்வருவதை அனுமதிக்கும். இது சீன-இந்திய பதட்டங்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டதால் சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியா பக்கம் மாற்றும் நோக்கமாகக் கொண்டது.
அதே நேரத்தில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐடி ஹார்டுவேர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவின் பிஎல்ஐ திட்டங்கள் சீனாவை தளமாகக் கொண்ட உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு பாகங்கள் தயாரிப்பாளர்கள் சீனாவிலிருந்து, இந்தியாவுக்கு மாற வேண்டும். விதிகள் காரணமாக இது கடினமாக உள்ளது. உதிரி பக்கங்கள் இல்லாமல் அசம்பளிங் வேலை நிறைவுறாததால் தொழில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆனால் சீன செயலிகள் தடை, சீனா தொலைபேசிகள் மீதான அரசின் விசாரணை மற்றும் வழக்குகள் காரணமாக சீன உதிரி பாக நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் இடமளிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயமாக உள்ளது.
சீனா மற்றும் வியட்நாம் போன்ற தொழில்மையங்களில் இருந்து மாற்ற நாட்டு நிறுவனங்களை இந்தியாவை நோக்கி வர வைக்கும் நோக்கத்துடன் ஸ்மார்ட்போன் உற்பத்திக்காக ரூ.41,000 கோடி மதிப்பிலான PLI வெளியிடப்பட்டது. 2026 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள போன்களை ஏற்றுமதி செய்யும் இலக்குடன் இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான உற்பத்தி இடமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.