மின்சார வாகனங்களின் பதிவுக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முடிவு!

இறக்குமதி செய்யப்படும் மின்சார கார் உதிரிபாகங்களுக்கான வரியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதியாக குறைத்தது

மின்சார வாகனங்களின் பதிவுக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முடிவு!
எலெக்ட்ரிக் கார்.
  • News18
  • Last Updated: June 20, 2019, 7:24 AM IST
  • Share this:
மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார கார் உதிரிபாகங்களுக்கான வரியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதியாக குறைத்தது.

இந்த நிலையில், அத்தகைய வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கான பதிவை புதுப்பிக்கும்போது, அதற்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும் வரைவு அறிக்கையை தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் மின்சார கார்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக, தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: June 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்