ஹோம் /நியூஸ் /வணிகம் /

Exclusive : 'தேர்தல் வரும்; போகும். ஆனால் பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து தரப்பினர் ஆதரவு தேவை' - நிர்மலா சீதாராமன்

Exclusive : 'தேர்தல் வரும்; போகும். ஆனால் பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து தரப்பினர் ஆதரவு தேவை' - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 2 வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேர்தலை மனதில் வைத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தல் வரும் போகும், ஆனால் பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து தரப்பின் ஆதரவு தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

நெட்வொர்க் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-

பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து தரப்பின் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல்வேறு துறையினர் ஒத்துழைப்புடன் பணியாற்றும்போதுதான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நாம் எதிர்பார்க்க முடியும்.

அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில், பொது நிதியை முதலீடாக பயன்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையானது கடந்த நிதியாண்டிலும் நல்ல பலனை அளித்தது.

அடிப்படை கட்டமைப்புக்கு பொது நிதியை முதலீடாக ஏற்படுத்தும்போது, ஒவ்வொரு ரூபாயும் தோராயமாக ரூ. 2.95 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் பல்வேறு தரப்பினர் பங்கேற்கும்போது அவர்களுக்கும் கணிசமான லாபம் கிடைக்கும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 2 வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நெட்வொர்க் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷி கேள்வி எழுப்பியதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது-

தேர்தல் வரும் போகும், ஆனால் பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து தரப்பின் ஆதரவு தேவை. நிச்சயமாக தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2022