Home /News /business /

இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால் பங்குச்சந்தை என்ன ஆகும்?

இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால் பங்குச்சந்தை என்ன ஆகும்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

தற்போதைய அரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் போது கண்டிப்பாகப் பங்குச்சந்தை புதிய உச்சத்திற்கு உயரும் என்று கூறுகின்றனர்.

  • News18
  • Last Updated :
    2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால் பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொடும் என்று ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

    2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற 6 மாதத்திற்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தை 15 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் பங்குச்சந்தை 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    2019-ம் ஆண்டில் இதுவரையில் இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் 38,969 புள்ளிகளைத் தொட்டது. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்தால் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

    பங்குச்சந்தை வல்லுநர்களும் தற்போதைய அரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் போது கண்டிப்பாக பங்குச்சந்தை புதிய உச்சத்திற்கு உயரும் என்று கூறுகின்றனர். இதுவே தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தால் பங்குச்சந்தை சரியும்.

    2019 மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானதை அடுத்து, திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3.75 சதவீதம் உயர்ந்து 39,352.67 புள்ளிகளாகவும், நிஃப்டி 3.69 சதவீதம் உயர்ந்து 11,828.25 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

    நேற்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 140.41 புள்ளிகள் என 0.36 சதவீதம் உயர்ந்து 39,110.21 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 28.80 புள்ளிகள் என 0.25 சதவீதம் உயர்ந்து 11,737.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Election Result, Lok Sabha Election 2019, Nifty, Sensex, Stock market

    அடுத்த செய்தி