Home /News /business /

மேல் படிப்புக்காக வங்கிகளில் லோன் எடுக்க போறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

மேல் படிப்புக்காக வங்கிகளில் லோன் எடுக்க போறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

லோன்

லோன்

கல்வி கடனில் ரூ.4 லட்சம் வரையிலான கடனுக்கு எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் தேவைப்படாது.

    உயர் கல்வி பயிலுவதற்கான கல்வியாண்டு தொடங்கியிருக்கின்ற இந்த வேளையில், பல மாணவர்கள் தங்கள் படிப்புக்கு கடன் பெற திட்டமிட்டு வரக் கூடும். வட்டி விகிதங்கள் உயர்ந்து வரும் நிலையில், கடன் செலவின மதிப்பும் உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில், கல்விக் கடன் பெற்று வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இது இரட்டிப்பு சுமையாக அமையக் கூடும்.

    மாணவர்கள் முதலில் தங்கள் கல்விக்கு ஆகும் மொத்த செலவு என்ன என்பதை கணக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக, தாங்கள் தேர்வு செய்வது என்ன படிப்பு, விடுதிக் கட்டணம் எவ்வளவு, உணவு மற்றும் ஆய்வுக்கூட கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்.

    கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்!

    நீங்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிக்க போகிறீர்கள், கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் விவரம், திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் மாணவரின் குடும்பத்தினுடைய மொத்த வருமானம் ஆகிய அனைத்து விவரங்களை பரிசீலனை செய்த பிறகுதான் உங்களுக்கான அதிகபட்ச கடன் தொகை என்பது முடிவு செய்யப்படும்.

    பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்களை கொண்ட மாணவர்களுக்கு மிக அதிகப்படியான கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு

    வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற மோகம் மாணவர்கள் மத்தியில் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம், எந்தவொரு பலம் வாய்ந்த வெளிநாட்டு கரன்ஸிக்கு நிகரான ரூபாய் மதிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதையும், நீங்கள் கல்வி பயிலும் காலத்தில் இந்த சரிவு இன்னும் உயரக் கூடும் என்பதையும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    கொலேட்டரல் தேவைகள்

    கல்விக் கடன் பெறுவதற்கு கொலேட்டரல் தேவைகள் என்று சொல்லக் கூடிய, கடனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து பார்க்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் தேவைப்படாது. ரூ.4 லட்சம் மேலான கடனுக்கு பிஎல்ஆர் பிளஸ் 1 சதவீதத்திற்கு அதிகமாக வட்டி அதிகரிப்பு இருக்காது.

    சொந்த வீடு கட்ட ஆசை இருந்தால் மட்டும் போதாது.. இந்த விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும்!

    சில வங்கிகள் மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலும் பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி கடன் வழங்குகின்றன. அதே சமயம், ரூ.7.5 லட்சத்திற்கு மேலாக கடன் பெறும்போது, அதன் கூட்டு வட்டி தொகை மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் காலம் வரையிலான குறைந்தபட்ச மதிப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதம் தேவைப்படலாம்.

    டாலரில் கடன்

    வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சில வங்கிகள் டாலர் மதிப்பில் கடன் கொடுக்கின்றன. ரூபாய் கடன் அல்லது டாலர் கடன் என இரண்டில் எது சிறந்தது என்பதை மாணவர்கள் விரிவாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அதே சமயம், டாலர் கடன் என்பது அனைத்து விதமான படிப்புகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துவிடாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank Loan, Business, Educational Loan

    அடுத்த செய்தி