Home /News /business /

இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!

இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!

பேங்க் லோன்

பேங்க் லோன்

7.5 லட்சத்துக்கும் மேலான கல்விக் கடன்களுக்கு, கடன் வழங்குபவர்கள் சொத்து, வங்கி வைப்பு, பரஸ்பர நிதிகள், காப்பீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றை கோரலாம்.

    வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற ஆசை இந்திய மாணவர்களிடையே அதிகம் உண்டு. பெரும்பாலான பெரிய வங்கிகள் மற்றும் சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்விக்காக கடன்களை வழங்குகின்றன, பெரிய கடன் தொகைகள் மற்றும் பணி விசாக்களுக்கான அதிக கட்டுப்பாடுகள் கடனில் இருக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கடனைப் பெறும் போது, ​​கடன் அம்சங்களையும், ஒருவரின் திருப்பிச் செலுத்தும் திறனையும் கவனமாகப் பகுப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமானது.

    கடன்தொகை:

    உங்களுடைய படிப்புக் கட்டணம், பயணச் செலவுகள், விடுதிக் கட்டணம், மடிக்கணினி, புத்தகங்கள், உபகரணங்கள் போன்றவற்றின் விலையை உள்ளடக்கிய உங்கள் கடன் தொகை போதுமானதாக இருக்க வேண்டும். கடல்சார் கல்விப் படிப்புகளுக்கான கடன் தொகை ரூ. 1.5 கோடி வரை இருக்கும். கடனுக்கான வட்டியைக் குறைக்க கடன் தொகையின் மார்ஜினை அதிகமாக்க முயற்சியுங்கள். கடன் வழங்குபவர்கள், கடன் வாங்குபவர்கள் தங்களது உதவித்தொகையை மார்ஜின், அதாவது முன்பணமாக செலுத்த அனுமதிக்கிறார்கள்.

    பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவிகள்.. எப்படி பெறுவது? முழு விபரம்!

    திருப்பிச் செலுத்தும் காலம்:

    உள்நாட்டு நிறுவனங்களுக்கான கல்விக் கடன்களைப் போலவே, வெளிநாட்டுப் படிப்புகளுக்குப் பெறப்படும் கடன்களுக்கும் 15 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் உள்ளது. கல்விக் கடனுக்கான திருப்பிச் செலுத்தும் தொகையான மாதாந்திர தவணையானது (EMI), கடனை திரும்பிச் செலுத்த வேண்டிய காலத்தில் இருந்தே கணக்கிடப்படுகிறது, கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து அல்ல. எவ்வாறாயினும், கடன் வழங்கப்பட்ட உடனேயே வட்டிக் கணக்கீடு தொடங்கிவிடும் மற்றும் உங்கள் அசல் தொகையில் வட்டித் தொகை சேர்க்கப்படும். எனவே, கல்விக் கடன் வாங்குபவர்கள் தங்களுடைய வட்டியை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திரும்ப செலுத்த முயற்சிப்பது நல்லது.

    முன்பணம் (மார்ஜின் தொகை):

    மார்ஜின் என்பது மொத்த செலவிற்காக நீங்கள் செலுத்தும் முன்பணத்தை குறிக்கிறது. மார்ஜின் பணம் என்பது கல்விக் கடன் மூலம் நிதியளிக்கப்படாத பாடநெறிக் கட்டணத்தின் விகிதத்தைக் குறிக்கிறது. கடன் வாங்குபவர் தனது சொந்த மூலங்களிலிருந்து இந்தக் கூறுகளுக்கு நிதியளிக்க வேண்டும். இந்தத் தொகையை ஸ்காலர் ஷிப் அல்லது அசிஸ்டெண்ட் ஷிப் தொகை மூலமாகவும் மாணவர்கள் கட்டலாம். வங்கியில் பெறப்படும் ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு எந்த மார்ஜின் பணமும் தேவையில்லை. ஆனால் ரூ. 4 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு, கடனளிப்பவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்பு செலவிற்கான 15 சதவீத தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும்.

    வட்டி விகிதம்:

    கடன் வழங்குபவர்கள் பொதுவாக கல்விக் கடனுக்கு மிதக்கும் வட்டி விகிதத்தில் (floating rate of interest) வழங்குகிறார்கள். வெளிநாட்டுப் படிப்புகளுக்குப் பெறப்படும் கடன்களின் வட்டி விகிதங்கள் பொதுவாக இந்திய கல்வி நிறுவனங்களில் தொடரப்படும் படிப்புகளுக்கு விதிக்கப்படும் விகிதத்தை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக வெளிநாட்டு கல்வி நிறுவனம் முதன்மையான ஒன்றாக இருந்தால் அதன் அளவு மேலும் அதிகரிக்கும். தற்போது, ​​வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன் வட்டி விகிதங்கள், கடன் வழங்குபவர், பாடநெறி வகை, நிறுவனம், கல்வி செயல்திறன், வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் கடன் வாங்குபவர்/இணை விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து ஆண்டுக்கு சுமார் 8 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.

    போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் அந்த வசதியை பெறுவது இவ்வளவு ஈஸியா!

    வரிச் சலுகைகள்:

    தனக்கு, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அல்லது பாதுகாவலரின் கீழ் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக கடன் பெறும் தனிநபர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80E பிரிவின் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம். இந்த விலக்குக்கு மேல் வரம்பு இல்லை ஆனால் EMI திருப்பிச் செலுத்தும் நாளிலிருந்து எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பெற முடியும். எனவே, கடன் பெற்றவர்கள் EMI திருப்பிச் செலுத்தத் தொடங்கிய எட்டு ஆண்டுகளுக்குள் கல்விக் கடனை முழுமையாகச் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

    பிணை/கடன் உத்தரவாதம்:

    கடன் வழங்குபவர்கள் பொதுவாக ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு பிணை அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதத்தை வலியுறுத்த மாட்டார்கள். ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவரிடம் மூன்றாம் நபர் உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டி வரும்.

    எவ்வாறாயினும், சில கடன் வழங்குநர்கள் மூன்றாவது நபரின் உத்தரவாதத்தை தேவையில்லை என அறிவித்துள்ளன. அவை கடனளிப்பவர் கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் அல்லது கடன் விண்ணப்பதாரர்/இணை கடன் வாங்குபவரின் நிகர மதிப்பில் திருப்தி அடைந்திருந்தாலே கடன் வழங்க முன்வருகின்றனர். 7.5 லட்சத்துக்கும் மேலான கல்விக் கடன்களுக்கு, கடன் வழங்குபவர்கள் சொத்து, வங்கி வைப்பு, பரஸ்பர நிதிகள், காப்பீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றை கோரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Educational Loan, Loan

    அடுத்த செய்தி