• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பணம் இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லையா? கைகொடுக்கிறது பிரபல வங்கி!

பணம் இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லையா? கைகொடுக்கிறது பிரபல வங்கி!

கல்வி கடன்

கல்வி கடன்

ரெப்போ விகிதம் குறையும் போது வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயம் வேண்டாம்.

  • Share this:
    பணப்பிரச்சனையால் விரும்பிய படிப்பை தொடர முடியவில்லையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!

    பண சிக்கலால் படிப்பை இழந்தவர்கள் இங்கு ஏராளம். இனியும் கவலை வேண்டாம். உங்களின் பொருளாதாரத்தை நினைத்து படிப்பை பாதியில் நிறுத்தாதீர்கள். மிகப்பெரிய வங்கி கைக்கொடுத்து உதவ போகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உங்களின் கல்விக்காக ரூ. 1 கோடி வரை டிஜிட்டல் முறையில், கடனை வழங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கனவை தொடருங்கள். இன்ஸ்டான்ட் எஜூகேஷன் லோன் என்பது ப்ரீ அப்ரூவ்ட் லோனாக பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் ஆவணங்களை சமர்பிக்க அதிகப்படியான பேப்பர் வொர்க்கினை செய்ய வேண்டியதில்லை.

    தகுதி:

    வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புக்காக விண்ணப்பித்து பணம் இன்றி சிரமப்படுவோர் விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பிணையமின்றி (Without Collateral) வழங்கப்படும்.ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் முன் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.இணைய வசதி மூலம் நீங்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பம் அனுப்ப முடியும்.

    also read வெறும் ரூ.1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

    9.25 சதவிகிதம் வட்டி.இது அதிகமாக இருக்கின்ற போதிலும் வட்டியானது ரெப்போ புள்ளிகளிடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதம் குறையும் போது வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயம் வேண்டாம்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க மாணவர்கள் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள இயலும். அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலவும், ரூ. 50 லட்சம் உள்நாட்டில் கல்வி கற்கவும் கடனாக பெற்றுக் கொள்ள முடியும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் இருக்கு ஐசிஐசிஐ வங்கிக்கு சென்று விசாரிக்கலாம் அல்லது ஆன்லைனிலும் தெரிந்துக்கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: