ஹோம் /நியூஸ் /வணிகம் /

கல்வி கடன் மீதான இன்ஷூரன்ஸிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.? காரணங்கள் இங்கே.!

கல்வி கடன் மீதான இன்ஷூரன்ஸிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.? காரணங்கள் இங்கே.!

கல்வி கடன்

கல்வி கடன்

Education Insurance Policy | கல்வி கடன் மீது ஒருவர் ஏன் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று பலரும் வெளிநாடுகளில் சென்று மேற்படிப்பு படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக கல்வி கடன்களை பயன்படுத்துகிறார்கள். வெளிநாட்டு கல்விக் கடனைப் பெறுவது என்பது பலருக்கு பெரும் நிதிப் பொறுப்பை ஏற்று கொள்வதாக தோன்றி கவலையையும் ஏற்படுத்துகிறது. அதோடு வீட்டை விட்டு பிரிந்து கல்வி கற்கும் நாட்டிலே தங்க நேரிடுவதால் அங்கிருக்கும் அபாயங்களை நினைத்தும், கல்வி கடனை எப்படி கட்டி முடிக்க போகிறோம் என்பதை நினைத்தும் கவலை கொள்கிறார்கள்.

வெளிநாட்டு படிப்பிற்காக லட்சக்கணக்கில் கல்வி கடனை பெறும் போது மாணவர்கள் முக்கிய விண்ணப்பதாரராக இருக்கும் நேரத்தில், பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்களே இணை விண்ணப்பதாரர்களாக ( co-applicant) மாறுகிறார்கள். வாழ்க்கை நிச்சயமற்றது என்பதால் துரதிர்ஷ்டவசமாக, ஏதேனும் எதிர்பாராத சம்பவம் நடந்தால் அத்தகைய சந்தர்ப்பங்களில் கல்வி கடன் திருப்பிச் செலுத்தும் சுமை நேரடியாக இணை விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர்கள் மீது விழுகிறது. எனவே இத்தகைய நெருக்கடியை தவிர்க்க வெளிநாட்டுக் கல்விக் கடன் மீது ஒரு இன்ஷூரன்ஸ் வைத்திருப்பது சிறந்ததாக இருக்கும்.

இது குறித்து இந்தியாவின் முதல் எஜூகேஷன் ஃபினான்ஸிங் மார்க்கெட்பிளேஸான GyanDhan-ன் நிறுவனர் அங்கித் மெஹ்ரா கூறுகையில், கல்விக் கடன் காப்பீடு சிறந்த தீர்வு மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும்போது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றார். கல்வி கடன் செயல்பாட்டில் லோன் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம் பற்றியும், ஏன் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார் அங்கித் மெஹ்ரா.

கல்வி கடன் மீது ஒருவர் ஏன் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள் இங்கே...

தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் மீது ஏன் பெற்றோர்கள் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்?

மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு அவர்கள் பெரியளவில் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் வரை இணை விண்ணப்பதாரரான பெற்றோர்கள் மீதே பெரும்பாலும் விழுகிறது. ஒருவேளை பிள்ளைகள் வேலைக்கு சென்ற பிறகோ அல்லது இடையில் ஏதேனும் துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழ்ந்தால், கல்வி கடன் மீது இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் கடன் தொகை முழுவதையும் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்துவதற்கு இணை விண்ணப்பதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் கடன் பெற்றுள்ள மாணவருக்கு கடும் காயம் ஏற்படும் சூழலில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் முழு கல்வி கடன் தொகையையும் திருப்பி செலுத்தும் பொறுப்பை ஏற்கும்.

Also Read : குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள்..!

குறிப்பிடத்தக்க பலன்கள்:

- விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டுக் கல்வி கடன் இன்ஷூரன்ஸின் பிரீமியங்களை தனியே செலுத்த தேவையில்லை. அவை கல்விக் கடனின் EMI-களில் சேர்க்கப்பட்டு விடும்.

- வேலையிழப்பு உள்ளிட்ட எந்தவொரு எதிர்பாராத சம்பவம் காரணமாக குறிப்பிட்ட நபரால் கல்வி கடன் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் காரில் இருக்கும் ஏர்பேக் போல அவரை இன்ஷூரன்ஸ் பாதுகாக்கிறது. ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் கடன் பெற்ற நபருக்கு பொருளாதார ரீதியாக பலத்த அடி ஏற்படுவதிலிருந்து காக்கிறது.

- வெளிநாட்டுக் கல்விக் கடன் மீது எடுக்கப்படும் இன்ஷூரன்ஸின் பொறுப்பு இணை விண்ணப்பதாரராக இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் தலையில் கடன் சுமை இறங்காது.

- சில சந்தர்ப்பங்களில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது லோன் இன்ஷூரன்ஸ் பிளானை வாங்கும் மாணவர்கள், அவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் கூடுதலாக தள்ளுபடியை பெற கூடும்.

மாணவர்களுக்கு பயன்பட கூடிய இன்ஷூரன்ஸ்கள் என்னென்ன?

லோன் இன்ஷுரன்ஸ் என்று வரும் போது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை பாதுகாக்க ஹெல்த் இன்ஷுரன்ஸ், எஜூகேஷன் லோன் இன்ஷூரன்ஸ், ஸ்டூடன்ட் ட்ராவல் இன்ஷுரன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

Also Read : பெண் குழந்தையின் பெற்றோரா? மத்திய அரசின் இந்த 4 நிதி திட்டங்களை தவறவிட வேண்டாம்

எப்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்கும்?

கடன் பெற்ற விண்ணப்பதாரர் குணப்படுத்தவே முடியாத நோயால் பாதிக்கப்படும் சமயங்களில் அல்லது மரணிக்கும் நேரத்தில் குறிப்பிட்ட கல்வி கடனை கட்டும் பொறுப்பை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்கும். சில இன்ஷூரன்ஸ் பிளான்கள் விண்ணப்பதாரர் வேலை இழந்தால் கூட கடனை திருப்பி செலுத்த உதவும்.

Published by:Selvi M
First published:

Tags: Educational Loan, Insurance, Tamil News