Home /News /business /

சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை

சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை

சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்

சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்

அந்நிய செலாவணி சட்டத்தை மீறி சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரில் சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அந்நிய செலாவணி சட்டத்தை மீறிய புகாரில் சீனாவைச் சேர்ந்த முன்னணி ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. எம்ஐ(MI) என்ற பிராண்டில் நாடு முழுவதும் ஸ்மார்ட் போனை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    இந்த நடவடிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவைச் சேர்ந்த சியோமி குழுமத்தின் உறுப்பு நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனம், இந்தியாவின் அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் , 1999க்கு புறம்பாக நிதி பரிவர்த்தனை மேற்கொண்டுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

    சியோமி நிறுவனம் இந்த மோசடி தொகையை இரு போலி நிறுவனங்களை உருவாக்கி அதில் ரெமிட்டன்ஸ் தொகையாக செலுத்தி தனக்கே அதை பயன்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கும் தவறான தகவலை சியோமி நிறுவனம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. முன்னதாக சியோமி நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவர் மனு குமார் ஜெயினை அமலாக்கத்துறை இம்மாதம் விசாரித்தது.

    இதையும் படிங்க:  இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை

    இந்தியாவில் தனது செயல்பாட்டை 2014ஆம் ஆண்டில் ஆரம்பித்த சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டில் இருந்தே இந்த ரெமிட்டன்ஸ் மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளது. இது அமலாக்கத்துறையின் கவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் தெரியவந்த நிலையில், விசாரணை தொடங்கப்பட்டு தற்போது FEMA(Foreign Exchange Management Act) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக சியோமி நிறுவனம் சார்பில் இதுவரை எந்த பதில் விளக்கமும் தரப்படவில்லை.
    Published by:Kannan V
    First published:

    Tags: Enforcement Directorate, Xiaomi

    அடுத்த செய்தி