அந்நிய செலாவணி விதிமீறல்? அமேசான் நிறுவனத்தின் மீது விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத் துறை

கோப்புப் படம்

ரிலையன்ஸ் குழுமத்துக்கு தன் சொத்துக்களை விற்பதிலிருந்து பியூச்சர் குழுமத்தை தடுத்த சிங்கப்பூர் எமர்ஜென்சி நடுவாண்மை உத்தரவை அமல்படுத்துமாறு அமேசான் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததையடுத்து அமேசான் ஏதேனும் அன்னிய செலாவணி விதிமீறல் செய்துள்ளதா என்ற விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

 • Share this:
  2019-ம் ஆண்டு பியூச்சர் குழுமத்துடனான ஒப்பந்தத்தில் அமேசான் நிறுவனம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டப்பிரிவுகளை மீறியுள்ளதா என்பதை விசாரிக்க மத்திய அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ரிலையன்ஸ் குழுமத்துக்கு தன் சொத்துக்களை விற்பதிலிருந்து பியூச்சர் குழுமத்தை தடுத்த சிங்கப்பூர் எமர்ஜென்சி நடுவாண்மை உத்தரவை அமல்படுத்துமாறு அமேசான் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததையடுத்து அமேசான் ஏதேனும் அன்னிய செலாவணி விதிமீறல் செய்துள்ளதா என்ற விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

  வியாழனன்று பிடிஐ செய்தி ஏஜென்சி அதிகாரபூர்வ தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமேசான் மீது அமலாக்கத்துறை அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தகவல் வெளியிட்டது.

  இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகத்திலிருந்து அமலாக்கத்துறைக்கு வந்த அறிவிக்கையின் படி ‘தேவையான நடவடிக்கை’யை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகத் தெரிகிறது.

  மேலும், டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை தன் கட்டுக்குள் கொண்டு வர அமேசான் நிறுவனம் பட்டியலிடப்படாத இந்திய நிறுவனத்திடம் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது அன்னியச் செலாவணி சட்டத்தை மீறுவதாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்ததும் அமலாக்கத்துறையின் தற்போதைய விசாரணை நடவடிக்கைக்குக் காரணமாக உள்ளது.

  ஆனால் அமேசான் நிறுவனம் கூறும்போது, “அமலாக்கத்துறை ஏதேனும் புதிய வழக்கைத் தொடர்ந்துள்ளதா என்பது பற்றி தங்களுக்குத் தகவல் இல்லை என்று கூறியுள்ளது.

  கடந்த ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு பியூச்சர் குழுமத்தின் பங்குச்சந்தையில் பட்டியலாகாத நிறுவனத்திடமிருந்து 49% பங்குகளை வாங்க அமேசான் ஒப்புக் கொண்டது. இந்திய தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு விதிகளையும் அன்னிய செலாவணி சட்ட விதிமுறைகளையும் மீறுவதாக புகார் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அமேசான் மீது விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகத் தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: