Home /News /business /

பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் என்னென்ன?

பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் என்னென்ன?

பொருளாதார ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை

நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என்றும் 2022-23ம் வது நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8 புள்ளி 5 விழுக்காடாக குறையும் என்றும் பொருளாதார நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9 புள்ளி 2 விழுக்காடு வளர்ச்சி காணலாம் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 2022-23ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8 புள்ளி 5 விழுக்காடாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது

    2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் விவசாய துறை பெருமளவு பாதிக்காத நிலையில், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள் 3 புள்ளி 9 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுரங்கம், கட்டுமானம் போன்ற தொழில்துறை வளர்ச்சி 11 புள்ளி 8 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சேவைத்துறை கடும் நெருக்கடியை சந்தித்ததாக முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்ஜிவ் சன்யல் தெரிவித்துள்ளார்.  நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என்றும், கொரோனா தொற்று காலத்திற்கு முந்தைய பொருளாதார நடவடிக்கைகள் மீள்ச்சிக்கு உதவியதை காட்டுவதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், 2022-23ம் வது நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8 புள்ளி 5 விழுக்காடாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தை விட 67 சதவிகித வருவாய் அதிகரித்துள்ளதாகவும் . தேவைப்பட்டால் கூடுதல் ஆதரவை வழங்க அரசாங்கத்திடம் நிதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் கட்டுக்குள் இருக்கும் நிலையில் மொத்த விலை குறியீட்டு எண் இரண்டு இலக்க எண்ணை தொட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இறக்குமதி செய்யப்படும் பணவீக்கம், குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் - எதிர்பார்ப்புகள் என்ன?


    பெருந்தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில், பொருளாதாரத்தை ஸ்த்திரதன்மையுடன் கொண்டு செல்ல, விநியோக பக்க யுத்தியை கையாள வேண்டும் என்றும் ஆயவறிக்கையில் யோசனை கூறப்பட்டுள்ளது.  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை 814 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 238 புள்ளிகள் உயர்வு பெற்று வர்த்தகத்தை நிறைவு செய்தன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chief Economic Advisor, Indian economy, Union Budget 2022

    அடுத்த செய்தி