புதிதாக இணைக்கப்பட்ட ‘தாலினாமிக்ஸ்’...! பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னென்ன...?

புதிதாக இணைக்கப்பட்ட ‘தாலினாமிக்ஸ்’...! பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னென்ன...?
  • News18
  • Last Updated: February 1, 2020, 9:02 AM IST
  • Share this:
பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொதுவாக மத்திய பட்ஜெட் எதன் அடிப்படையில் இருக்கும் என்பதற்கான ஒரு வழிகாட்டியாக, பொருளாதார ஆய்வறிக்கை பார்க்கப்படும்.

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. உலக அளவில், வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின், செல்வம் அனைவரிடமும் விநியோகிக்கப்பட வேண்டும். முதலில் செல்வத்தை உருவாக்க வேண்டும் என்றும் செல்வத்தை உருவாக்குபவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

வெங்காயம் போன்ற உணவு பொருட்களின் விலையை சரிப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றதாகத் தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தொழில்கள் உருவாக வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு 10 சதவிதம் புதிய நிறுவனங்கள் உருவானால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 புள்ளி 8 சதவிதம் உயரும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.2011-12ம் ஆண்டில் இருந்தே, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நிதி சிக்கலில் இருந்ததாகவும், இது புதிய நிகழ்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் வங்கிகளின் பங்குகள், ஊழியர்களின் திறமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கினால், அவர்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரு ஹோட்டல் தொடங்க வேண்டும் என்றால் 45 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் ஆனால், துப்பாக்கி வாங்க 19 ஆவணங்கள் கொடுத்தால் போதுமானது என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க தேவையான அனுமதிகளை பெற 18 நாட்கள் ஆகும், ஆனால் நியூசிலாந்தில், ஒரே நாளில், ஒரே ஒரு படிவத்தில் அனுமதி பெற்று விடலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ள்ளது.

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக, சீனாவின் மாடலை பின்பற்ற வேண்டும் என்றும் மேக் இன் இந்தியாவுடன், Assemble in India for the world என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Assemble in India for the world மூலமாக, 2025ம் ஆண்டில் 4 கோடி வேலை வாய்ப்புகளையும், 2030ல் 8 கோடி வேலை வாய்ப்புகளையும் உருவாக முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு ஐபோனை ASSEMBLE செய்ய சீனாவிற்கு 8.46 டாலர் வழங்கப்படுகிறது. Assemble in India for the world மூலமாக, Assemble in India for the world மூலமாக, 2025ம் ஆண்டில் 4 கோடி வேலை வாய்ப்புகளையும், 2030ல் 8 கோடி வேலை வாய்ப்புகளையும் உருவாக முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டில் 4 கோடி வேலை வாய்ப்புகளையும், 2030ல் 8 கோடி வேலை வாய்ப்புகளையும் உருவாக முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்கா சீனா இடையே உள்ள வர்த்தக போரை சாதகமாக பயன்படுத்தி, உலக நாடுகளுக்கு தேவையான பொருட்களை இந்தியா ASSEMBLE செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உண்ணும் உணவை கொண்டு, தாலினாமிக்ஸ் என்ற புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது

2006-07ம் ஆண்டு முதல் 2019-20 ஆண்டு வரையிலான காலத்தில், சைவ உணவை வாங்குவதற்கான திறன் 29 சதவிதமும், அசைவ உணவை வாங்குவதற்கான திறன் 18 சதவிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்