₹ 20.97 லட்சம் கோடி - திட்டங்கள் வாரியாக செலவிடப்படும் நிதி விபரங்கள்

”ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு”

₹ 20.97 லட்சம் கோடி - திட்டங்கள் வாரியாக செலவிடப்படும் நிதி விபரங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: May 18, 2020, 6:44 AM IST
  • Share this:
பொருளாதாரத்தை மீட்க 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். திட்டங்கள் வாரியாக செலவிடப்படும் நிதி குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்..

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாயும், விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் 2 லட்சம் கோடி ரூபாயும் கடன் வழங்கப்படும். ஒரு லட்சம் கோடி ரூபாயில் வேளாண் கட்டமைப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். மின் பகிர்மான நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் கோடி, வீட்டுவசதி கடனுக்கான வட்டி மானியமாக 70 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பரஸ்பர நிதிய முதலீடுகள், வரி பிடித்தம் செய்வதை குறைப்பது, வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியாக 30 ஆயிரம் கோடி ரூபாய், நபார்டு மூலம் கூடுதலாக அவசரகால செயல் மூலதனமாக 30 ஆயிரம் கோடி வழங்கப்படும்.


நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் துணைக் கடன், மீனவர்கள் மேம்பாட்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயும், கால்நடை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 15 ஆயிரம் கோடியும், சிறு உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கப்படும்.

சமூக கட்டமைப்புக்கு நிதியாக 8 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வழங்கப்படும். வருங்கால வைப்பு நிதி விகிதத்தை குறைத்ததன் மூலம் 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கிடைக்கும்.

தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன், மூலிகை பயிரிடுதல் ஊக்குவிப்பு, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச உணவு தானியம், தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆதாரம், முத்ரா கடனுக்கான வட்டிச் சலுகை, காய்கறிகள் பாதுகாப்பு திட்டம், தேனீ வளர்ப்பு ஊக்குவிப்பு ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கு முன்னதாக, ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 800 கோடி ரூபாயில், ஏழைகள் நலத் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. இதேபோல, ரிசர்வ் வங்கி 8 லட்சத்து ஆயிரத்து 603 கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading