முகப்பு /செய்தி /வணிகம் / உங்கள் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை வேறு கிளைக்கு ஆன்லைன் மூலம் எப்படி மாற்றுவது.?

உங்கள் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை வேறு கிளைக்கு ஆன்லைன் மூலம் எப்படி மாற்றுவது.?

ICICI

ICICI

ICICI Bank | நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர் என்றால் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை, வேறு ஒரு ஐசிஐசிஐ பேங்க் கிளைக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா.!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொதுவாக ஒரு வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போது நாம் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மற்றும் எளிதில் அணுகக்கூடிய பிராஞ்சில் ஓபன் செய்யவே முயற்சிப்போம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் வேறு இடத்திற்கு அல்லது நகரத்திற்கோ இடமாற்றமாகிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை நீங்கள் செல்லும் புதிய இடத்திற்கு அருகில் இருக்கும் கிளைக்கு மாற்ற விரும்புவீர்கள்.

இந்த மாதிரியான நேரத்தில் ஒரு அக்கவுண்ட்டை வேறொரு கிளைக்கு மாற்றுவது அவசியமாகிறது, ஏனென்றால் இன்றைய பிஸியான வாழ்க்கையில் ஏதேனும் அவசியம் என்றால் நீங்கள் வெகு தொலைவில் உள்ள உங்கள் ஹோம் கிளைக்கு அடிக்கடி செல்வது கடினம். நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர் என்றால் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை, வேறு ஒரு ஐசிஐசிஐ பேங்க் கிளைக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா.! உங்கள் ஐசிஐசிஐ ஹோம் பிராஞ்சை நீங்கள் மாற்ற விரும்பினால், குறிப்பிட்ட கிளைக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலமே செய்யலாம். ஆம், மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் மூலம் உங்களது பேங்க் அக்கவுண்ட்டை நீங்கள் விரும்பும் மற்றொரு கிளைக்கு மாற்றலாம்.

ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட்டை வேறொரு கிளைக்கு மாற்ற உதவும் படிப்படியான ஆன்லைன் ப்ராசஸ் இங்கே:

மொபைல் பேங்கிங் மூலம் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி.?

ஐசிஐசிஐ மொபைல் பேங்கிங் வசதி உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை ஆன்லைனில் நிர்வகிக்கவும், பல ஆன்லைன் பேங்கிங் சர்விஸ்களை அணுகவும் உதவுகிறது. டெபிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் ஐசிஐசிஐ மொபைல் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்யலாம். ஐசிஐசிஐ மொபைல் பேங்கிங் மூலம் ஹோம் கிளையை மாற்ற எப்படி கோருவது...

* ஐசிஐசிஐ ஐமொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் லாகின் செய்து Services என்பதற்குள் செல்லவும்.

* அடுத்த ஸ்கிரீனில் Account Services என்பதை டேப் செய்யவும். பின் Transfer your Accounts என்பதை செலக்ட் செய்யவும்.

* your Account number என்பதை செலக்ட் செய்து Yes என்பதை டேப் செய்யவும்.

* இப்போது உங்கள் புதிய ICICI பிராஞ்சை தேர்ந்தெடுக்கவும். மாநிலத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் சிட்டி பெயரை என்டர் செய்து உங்கள் பிராஞ்சை தேர்ந்தெடுக்கவும். இறுதியாக உங்கள் கோரிக்கையை submit செய்யவும்.

Also Read: வீட்டில் இருந்தே SBI கணக்கை வேறு கிளைக்கு மாற்றலாம்..... இதோ எளிய வழிமுறை!

நெட் பேங்கிங் மூலம் மூலம் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?

உங்கள் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றும் கோரிக்கையை ஆன்லைனில் சமர்ப்பிக்க மற்றொரு வழி ஐசிஐசிஐ நெட் பேங்கிங்.

* ஐசிஐசிஐ இன்டர்நெட் பேங்கிங்கில் லாகின் செய்து Customer Service செக்ஷ்னுக்கு சென்று Service Request என்பதை கிளிக் செய்யவும்.

* request செக்ஷ்னில் அக்கவுண்ட் விவரங்கள் திருத்தம் (Account Details Modification) தொடர்பான கோரிக்கைகளை பார்க்கலாம். அதில் “Transfer Your Account to your nearest branch/change home branch” என்பதை கிளிக் செய்யவும்.

* அடுத்த ஸ்கிரீனில் உங்கள் அக்கவுண்ட் நம்பரை தேர்ந்தெடுத்து No என்பதை கிளிக் செய்யவும்.

* இறுதியாக உங்கள் புதிய கிளையை தேர்ந்தெடுக்கவும். மாநிலம், நகரம் மற்றும் புதிய பிராஞ்சை தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் கோரிக்கையை submit செய்யவும்.

Also Read : மாதம் ரூ.2500 உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விடும்.. போஸ்ட் ஆபீஸில் இதை செய்து வையுங்கள்!

உங்கள் அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபர் கோரிக்கை 5 வேலை நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். அதே போல கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் ஏதேனும் நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனை செய்திருந்தால் அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபர் கோரிக்கை செயல்படுத்தப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

First published:

Tags: Bank, Bank accounts, Business, Current Account, ICICI Bank