பான் கார்டு என்பது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையாத ஆவணமாகும். அரசின் நிதி உதவிகள் முதல் வங்கி, மற்றும் இதர சேமிப்பு கணக்குகளை நிர்வகிப்பது வரை அனைத்திற்கும் பான் கார்டு என்பது அவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.
பான் கார்டு ஒரு முறை வாங்கினால் போதுமானது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த எண் மட்டும் தான் உங்கள் நிதி பரிவர்த்தனைகளின் அடையாளமாக இருக்கப்போகிறது. அதே போல பான் கார்டு தொலைந்துவிட்டால் மீண்டும் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. அதே பான் கார்டை மீண்டும் அச்சடித்துத் தர விண்ணப்பித்தால் போதுமானது.
உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டால், நகல் பான் கார்டை எப்படி பெறுவது என்று பதற வேண்டாம். எளிதாக அதை பெற்றுகொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் வழிமுறைகளை உங்களுக்குச் சொல்கிறோம். இதன்படி செய்தால் டென்ஷன் இல்லாமல் புது பான் கார்டு வீட்டிற்கே வந்து சேரும்.
பான் கார்டு நகலை இரண்டு முறைகளில் நீங்கள் பெற முடியும். உங்களுக்கு அட்டை வேண்டுமென்றால் ரூ.50 செலுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இல்லை நான் சாப்ட் காப்பியாக மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்று நினைத்தால் கட்டணம் ஏதும் இல்லாமல் இ-பான் கார்டு நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பான் கார்டு நகல் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
படி 1: TIN-NSDL இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று 'Services' என்பதைக் கிளிக் செய்யவும். அதில் 'PAN' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க புதிய பக்கத்தில் நுழையும்.
படி 2: அதில் ‘மீண்டும் பான் கார்டு பிரிண்ட்’ செய்யும் பகுதியில் “விண்ணப்பிக்க” என்ற தளத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது நேரடியாக https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
படி 3: அதில் உங்களது பான் எண் , ஆதார் எண் , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
படி 4: அதன் கீழே ஆதார் தரவுகளை பான் கார்ட் தரவுகளோடு சரி பார்க்கவும், ஆதார் தரவுகளை பயன்படுத்தவும் அனுமதி கோரப்படும். அதற்கு சம்மதத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு, பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதை அழுத்தவும்.
படி 5: அடுத்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் எண்ணிற்கும் மெயில் ஐடிக்கும் OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டதும் அடுத்த நிலைக்கு செல்லும்.
படி 6: அதில் உங்களுக்கு பான் கார்டு நகல் அட்டை வடிவத்தில் வேண்டுமா அல்லது இ-பான் கார்டு வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்வு செய்து 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: அடுத்து, நீங்கள் பணம் செலுத்தும் பிரிவுக்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் நெட் பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் ரூ.50 செலுத்தினால் முடிந்துவிட்டது.
இதையும் படிங்க: ஆதார் இணைக்காத பான் கார்டு ஏப்ரல் 1 முதல் செல்லாது - முக்கிய அறிவிப்பு!
அதன்பின்னர் வருமான வரித் துறையிடம் உள்ள உங்கள் சமீபத்திய விவரங்களின்படி தொடர்பு முகவரிக்கு PAN அட்டை அனுப்பப்படும். இதுவே இந்தியாவை விட்டு வெளியே உள்ள இந்தியர்கள் பான் கார்டு நகல் பெற விரும்பினால் அவர்களுக்கு கட்டணமாக ரூ.959.00 வசூலிக்கப்படும்.
இவை அனைத்தும் முடிந்ததும், உங்கள் எண்ணிற்கு இ-பான் கார்டு தரவிறக்கம் செய்து கொள்ள லிங்க் அனுப்பப்படும். அது போக 15 வேலை நாட்களுக்குள் பான் கார்டு வீடு தேடி வந்துவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Pan card