ஆடம்பர மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் விற்பனை செய்யும் ஒவ்வொரு iPhone X மொபைல் போனுக்கும் சாம்சங நிறுவனம் 110 டாலர் வருவாய் ஈட்டுகிறது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
ஐபோன் தயாரிக்கக் கூடிய அளவிற்கு எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சில நிறுவனங்களில் சாம்சங்கும் ஒன்று. சாம்சங் நிறுவனம் iPhone X-க்கு தேவையான NAND flash, DRAM chip, curved AMOLED display உள்ளிட்ட உதிரிப்பாகங்களைத் தயாரித்து விநியோகித்து வருகிறது.
ஆனால் சாம்சங், ஆப்பிள் என இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலும் ஆடம்பர போன் சந்தையில் மிகப் பெரிய போட்டி உண்டு. ஒருவர் மேல் ஒருவர் வழக்கு தொடுத்து மில்லியன் கணக்கில் பணத்தையும் வென்றுள்ளன.
இருந்தாலும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் தொடர்ந்து சுமுகமான வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது.
சாம்சங் நிறுவனம் 2019-ம் ஆண்டு iPhone X மாடலுக்கு விநியோகிக்கும் உதிரிப்பாகங்கள் மூலமாக மட்டும் 93,000 கோடி ரூபாய் மதிப்பிலான வருவாயைப் பெற உள்ளது. ஆனால் சாம்சங் கேலக்ஸி 8 போனை உற்பத்தி செய்வதன் மூலம் 65,000 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே ஈட்டி வருகிறது.
இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் இருப்பது வணிக நோக்கம் மட்டுமே. சாம்சங் நிறுவனத்திற்கு ஆப்பிள் தேவை, ஆப்பிளுக்குச் சாம்சங் தேவை.
நடிகர்களுக்காக சண்டை போடும் ரசிகர்களைப் போல போன் ரசிகர்களுக்கு இடையில், தான் வைத்து இருப்பது தான் சிறந்த போன் என்ற பிரமையும் மாறவும் போவதில்லை.
மேலும் பார்க்க: நல்லகண்ணு வாழ்க்கை கதை
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.