Home /News /business /

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் மற்றும் விமானப் பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் மற்றும் விமானப் பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

பயண கட்டணங்கள் உயர்வு

பயண கட்டணங்கள் உயர்வு

பண்டிகை காலத்தை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் பயணச்சீட்டு கிடைக்காத நிலையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், விடுமுறையை ஒட்டிய பயணங்களுக்கான டிக்கெட்டுகளை பெறுவது மிகக் கடினமான விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக, உள்நாட்டுப் பயணங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது.

விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்துள்ள அதே வேளையில், முக்கிய நகரங்களுக்கான ரயில் டிக்கெட் பெற முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பங்கா, வாரணாசி போன்ற நகரங்களுக்கான டிக்கெட்டுகளை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி அல்லது பீகார் மாநிலத்தின் எந்தவொரு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் தொலைதூர ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதற்கு முன்பாக இப்போதே ரயில் மற்றும் விமானப் பயணக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

விமானக் கட்டணங்கள் 3 மடங்கு விலை உயர்வு

டெல்லியில் இருந்து பாட்னா, தர்பங்கா, ராஞ்சி போன்ற நகரங்களுக்குச் செல்லக் கூடிய விமானப் பயணக் கட்டணங்கள் தான் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமான நாட்களில் வசூல் செய்யப்படும் கட்டணங்களைக் காட்டிலும் தற்போதைய பண்டிகைக் காலத்தில் வசூல் செய்யப்படும் கட்டணம் என்பது 3 மடங்கு உயர்வாக உள்ளது.

வழக்கமாக டெல்லியில் இருந்து பாட்னா செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.5,000 என்ற அளவில் இருக்கும். ஆனால், தற்போதைய பண்டிகைக் காலத்தில் இதே வழித்தடத்திற்கு இண்டிகோ மற்றும் விஸ்தாரா போன்ற விமானச் சேவை நிறுவனங்களின் சார்பில் ரூ.13,000 வரையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

Also Read : போஸ்ட் ஆபீஸில் இப்படியொரு வசதியும் வந்துடுச்சு.. இனிமே கவலையே இல்ல!

இதேபோல டெல்லி, துர்பங்கா நகரங்களுக்கு இடையிலான விமானப் பயணக் கட்டணம் என்பது சாதாரண நாட்களில் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரையில் இருந்தது. ஆனால், தற்போது அதே வழித்தட பயணத்திற்குப் பயணிகள் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரையில் செலுத்த வேண்டியுள்ளது. ராஞ்சி, லக்னோ, வாரணாசி, கோரக்பூர் போன்ற நகரங்களுக்கும் இதே நிலைதான் காணப்படுகிறது.

எல்லா நகரங்களையும் விடக் கூடுதல் கவனத்தை ஈர்த்திருப்பது பாட்னா நகருக்குத் தான். ஏனென்றால் வழக்கமான நாட்களிலேயே நாட்டின் எந்தவொரு நகரத்தைக் காட்டிலும் பாட்னாவிற்கான விமான டிக்கெட் கட்டணம் கூடுதலாகத் தான் இருக்கும். குறிப்பாக, தற்போதைய பண்டிகைக் காலத்தில் அது 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, நாட்டின் பிற நகரங்களில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணங்களும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.
Published by:Janvi
First published:

Tags: Diwali festival, Season, Ticket booking

அடுத்த செய்தி