கொரோனா வைரஸ் தாக்குதல்: இந்தியா- சீனா விமானங்களில் பயண ரத்து கட்டணம் இலவசம்!

மொத்தம் சீனாவில் 29 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல்: இந்தியா- சீனா விமானங்களில் பயண ரத்து கட்டணம் இலவசம்!
மாதிரிப்படம். (Image Source: AFP)
  • News18
  • Last Updated: January 27, 2020, 7:10 PM IST
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து சீனா செல்லும் விமானப் பயணங்களை  செய்ய விரும்புவோருக்க ரத்துக் கட்டணம் ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமானங்கள் விமானப் பயணத்தை ஒத்தி வைக்கவும், ரத்து செய்யவும் விரும்புவோருக்கு தனிக் கட்டணம் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் தினமும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்களை சீனாவுக்கு செயல்படுத்தி வருகிறது. வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் மூன்றாவதாக ஒரு விமானமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக சுமார் 13 நகரங்களுக்கான போக்குவரத்து வழிகளையே முற்றிலுமாக தடை செய்துள்ளது சீன அரசு. இதுவரையில் சுமார் 26 பேர் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பழியாகி உள்ளனர்.


மொத்தம் சீனாவில் 29 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 880 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் பார்க்க: மிகவும் நலிவடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம்... நோபல் வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி வேதனை!
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்