ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆசைப்பட்டு துபாயில் தங்கம் வாங்கிட்டீங்களா? அதை இந்தியா கொண்டு வர இவ்வளவு விதிமுறைகள் இருக்கு!

ஆசைப்பட்டு துபாயில் தங்கம் வாங்கிட்டீங்களா? அதை இந்தியா கொண்டு வர இவ்வளவு விதிமுறைகள் இருக்கு!

காட்சி படம்

காட்சி படம்

இந்திய சுங்க விதிமுறைகள் இந்தியப் பயணிகளுக்கு தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துபாயிலிருந்து வாங்கும் தங்கம் மலிவானதாகத் தெரிந்தாலும் இந்தியாவிற்குள் கொண்டுவரும் போது, சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி, எண்ணிகை, எடை எனப் பல தடைகளைக் கடந்து தான் விமானப் பயணிகள் எடுத்து வர வேண்டும்.

  வெளிநாட்டுப் பொருள்களின் மீதான மோகம் மக்களிடம் இன்னமும் குறைந்த பாடில்லை. சென்ட், டிரஸ், தலைவலி தைலம், நகைகள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைத்தாலும் நான் வெளிநாட்டிலிருந்து வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒருவித பெருமை தான் அனைவருக்கும். அதிலும் முதலீடுகளைத் தங்கத்தில் போடுபவர்கள் துபாய் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். “ தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு மற்றும் தங்களுடைய உறவினர்களுக்கு இந்தியா வரும் போதெல்லாம் வாங்கி வருகிறார்கள்.

  124 மாதங்களில் உங்கள் பணத்தை இருமடங்காக பெருக்க சூப்பர் திட்டம்!

  தற்போது தீபாவளி, தசாரா போன்ற பண்டிகைகள் வருவதால் துபாயில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறதாம். இந்தியா மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளில் விற்பனையாகும் தங்கத்தின் விலையில் பெரியளவு வித்தியாசம் இல்லை. கடந்த செப்டம்பரில் துபாய் சந்தையில் 1 கிராம் தங்கம் 4252 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

  அதே சமயத்தில் இந்திய சந்தையில் ஒரு கிராம் ரூபாய் 4,656க்கு விற்பனையானது. விலையில் பெரியளவு வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் ஜூலை 2022ல் இந்திய அரசாங்கம் இறக்குமதி வரியை 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இருந்தப்போதும் துபாய் தங்கம் தரமானதாக இருப்பதால் மக்கள் வாங்குவதை நிறுத்தவில்லை. எனவே நீங்கள் துபாயில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் இறக்குமதி வரியைத் தவிர்க்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

  துபாயில் தங்கம் வாங்க செய்ய வேண்டியது என்ன?

  துபாயில் நீங்கள் தங்கம் வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றால், குறைந்தது நீங்கள் ஒரு ஆண்டாவது துபாயில் தங்கியிருக்க வேண்டும். பின்னர் 1 கிலோ வரை தங்கத்தை நீங்கள் எடுத்து வரலாம். ஆனால் முறையான ஆவணங்கள், ரசீதுகள் மற்றும் பில்களை எடுத்துச் செல்லவில்லையென்றால் சுங்க வரித்துறையால் அபராதம் விதிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

  ஒரு தனி மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது? விடை இதோ!

  இதோடு விடுமுறை நாள்களுக்காக நீங்கள் துபாய் சென்று தங்க நகைகளை வாங்கி வரும் போது சுங்க வரித்துறை அதிகாரிகளால் பிடிபட்டால் 36.05 சதவீதம் சுங்க வரி மற்றும் இறக்குமதி வரியாக 15 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதோடு தங்கத்தின் எடை, தூய்மை மற்றும் ஆதாரம் குறித்த சரியான ஆதாரங்களை நீங்கள் வழங்கத் தவறினால் உங்களது நகைகளும் பறிமுதல் செய்யப்படலாம். ரத்தினங்கள்,வைரங்கள் மற்றும் முத்துக்கள் பதித்த தங்கநகைகளை துபாயிலிருந்து எடுத்து வர முடியாது.

  தங்க நகைகளுக்கான அளவுக்கட்டுப்பாடுகள் என்ன?

  இந்திய சுங்க விதிமுறைகள் இந்தியப் பயணிகளுக்கு தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. ஆண் பயணிகள் 20 கிராம் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கொண்டு வரலாம். அதே சமயம் பெண் பயணிகளாக இருந்தால் இதோடு இரு மடங்கு தொகையை எடுத்து வரலாம். மேலும் தம்பதியினராக இருந்தால் 60 கிராம் நகைகள் மற்றும் 1.5 லட்ச ரூபாய்க்கு மிகாமல் நீங்கள் எடுத்து வர முடியும்.

  எனவே துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரும் தங்கத்திற்கு இறக்குமதி வரியை தவிர்க்க நீங்கள் இதுப்போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Dubai, Gold