ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும்- மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும்- மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 4, 2019, 10:33 PM IST
  • Share this:
மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் மருந்துகள் விற்பனையை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்திய அரசு ஆன்லைன் மருந்துகள் விற்பனைக்கான முறையான சட்ட விதிமுறைகளை இன்னும் அமல்படுத்தவில்லை. ஆனால், மெட்லைஃப், நெட்மெட்ஸ், ஃபார்ம் ஈஸி, 1எம்ஜி ஆகிய ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் விற்பனை மூலம் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இது மருந்தகங்களுக்குப் பெரும் பின்னடைவு தருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.


இதுகுறித்து மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தலைவர் பங்காருராஜன் கூறுகையில், “நீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். ஆன்லைனில் மருந்து விற்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து...தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் பலி!
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...