விரைவில் சீனா உடன் வணிக ஒப்பந்தம்... ட்ரம்ப் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வணிக உடன்படிக்கை சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.

விரைவில் சீனா உடன் வணிக ஒப்பந்தம்... ட்ரம்ப் அறிவிப்பு!
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: December 22, 2019, 6:39 PM IST
  • Share this:
அமெரிக்கா மற்றும் சீனா இடையே விரைவில் வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குகொண்டு பேசிய ட்ரம்ப், “அமெரிக்கா - சீனா இடையேயான வணிக ஒப்பந்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே Phase One deal என்னும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இம்மாத தொடக்கத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வணிக உடன்படிக்கை சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறப்படுகிறது. இரு நாட்டுக்கும் இடையில் வர்த்தகப் போர் நிகழ்ந்து வந்த சூழலில் தற்போது ஏற்பட உள்ள உடன்படிக்கை உலக அளவிலான மாற்றத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.


அமெரிக்க விவசாயப் பொருட்களை சீனா வாங்க சம்மதிக்கும் சூழலில் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வரி விகிதங்களைக் குறைப்பதாக சீனாவுக்கு அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க கரூவூலச் செயலாளர் ஸ்டீவன் நுச்சின், “இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்த உடன்படிக்கைகளின் மொழிமாற்றப் பணி நிறைவடைந்துவிட்டது. நிச்சயமாக ஜனவரியின் முன் பாதியிலேயே கையெழுத்தாகிவிடும். சில தொழில்நுட்ப நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை அண்டை நாடுகளையும் பாதிக்க வாய்ப்பு- வங்கதேசம் கவலை
First published: December 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்