ஹோம் /நியூஸ் /வணிகம் /

இனி சீன பொருட்கள் மீது புதிய வரிகள் கிடையாது: டொனால்ட் ட்ரம்ப்

இனி சீன பொருட்கள் மீது புதிய வரிகள் கிடையாது: டொனால்ட் ட்ரம்ப்

ட்ரம்ப், ஜீ ஜின்பிங்

ட்ரம்ப், ஜீ ஜின்பிங்

இரு நாடுகளுக்கிடையில் நிலவி வந்த வர்த்தகப் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சீன பொருட்கள் மீது இனி புதிய வரி விதிப்புகள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

  அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வர்த்தகப் போரில் ஈடுபட்டு வந்தார்.

  இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது போன்று சீன அதிபர் ஜி ஜிபிங்கையும் சந்தித்து பேசினார்.

  இந்தச் சந்திப்பின் எதிரொலியாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி சீன பொருட்கள் மீது புதிய வரி விதிப்புகள் ஏதுமிருக்காது என்று ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

  மேலும், “நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம், அதில் ஏனோ சில இடங்களில் சறுக்கல்கள் ஏற்பட்டுவிட்டன என நினைக்கிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  அதனால் இரு நாடுகளுக்கிடையில் நிலவி வந்த வர்த்தகப் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. எனவே விரைவில் பங்குச்சந்தையில் வர்த்தகப் போரின் தாக்கம் தணிந்து சந்தை ஏறுமுகத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Donald Trump, Import tax, USA vs CHINA