முகப்பு /செய்தி /வணிகம் / சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Gas Cylinder price hike: கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1000ஐ கடந்தது.   மே 7ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின்  விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால்  ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.

  • Last Updated :

வீடுகளில் பயன்படுத்தப்படும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1050ஐ கடந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1000ஐ கடந்தது.   மே 7ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின்  விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால்  ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது. பின்னர்  மே 19ஆம் தேதி ரூ.1018.50 ஆக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது.

மேலும் படிக்க: சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.8.50  குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த ஜூலை ஒன்றாம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை 187 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

top videos

    First published:

    Tags: Gas Cylinder Price, LPG Cylinder