வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மேலும் 50 ரூபாய் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக விலை 1000 ரூபாயை கடந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கான மானியம் ரூ.25 எப்போதும் போல் வழங்கப்படுகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் | பெட்ரோல், டீசல் இன்றைய (மே 7-2022) விலை நிலவரம் - 31ஆவது நாளாக இன்றும் மாற்றம் இல்லை
கடந்த மே ஒன்றாம் தேதி நாடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலின்டரின் விலை ரூ.104 வரை உயர்த்தப்பட்டன. இதையடுத்து 19 கிலோ கமர்சியல் சிலின்டரின் விலை தலைநகர் டெல்லியில் ரூ.102.50 உயர்ந்து ரூ.2,355க்கு விற்பனையாகிறது. சென்னையில் 19 கிலோ கமர்சியில் சிலின்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை ஆகிறது. மும்பையிலும் விலை ரூ.102 உயர்த்தப்பட்டு, ரூ.2,307க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LPG, LPG Cylinder