பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு: ஏன் தெரியுமா?

பெட்ரோல், டீசல்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. இதன் காரணமாக பெட்ரோல் விலை சில நகரங்களில் 100 ரூபாயை எட்டியது. இதன் காரணமாக காய்கறி, பால், மளிகை பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கினர். இதனால் இல்லத்தரசிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகின் பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுட்க்கம் காரணமாக பெட்ரோல், டீசல் நுகர்வின் தேவை குறைந்ததையடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியை எண்ணெய் உற்பத்தி செய்யும் ஓபெக் நாடுகள் குறைத்தன. இதனிடையே பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் மக்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் உற்பத்தி அதிகரித்தது. மேலும் அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு, ஊக்க தொகுப்புகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியிருக்கிறது. கடந்த 10 -14 நாட்களில், கிட்டத்தட்ட 10% அளவுக்கு விலை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. Brent கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு 63.98 டாலர்கள் என்ற அளவில் இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் உள்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைவை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.

 
Published by:Arun
First published: