ஹோம் /நியூஸ் /வணிகம் /

பண்டிகை காலம்... அதிகரிக்கும் உள்நாட்டு தேவை- ஆய்வு கூறுவது என்ன?

பண்டிகை காலம்... அதிகரிக்கும் உள்நாட்டு தேவை- ஆய்வு கூறுவது என்ன?

பரிசு

பரிசு

Festive Season | இந்தியாவின் மாபெரும் நுகர்வு காலமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் உள்நாட்டுத் தேவைகள் அதிகரிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தில் மெதுவான மற்றும் நிலையான வளர்ச்சி காணப்பட்டது. இத்தகைய சூழலில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் உள்நாட்டு தேவை அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான 8 உயர்வு காரணிகளில் 4 காரணிகளை ப்ளூம்பெர்க் நியூஸ் நிறுவனம் ஆராய்ந்தபோது அதில் இரண்டு மெதுவான வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இரண்டு நிலையான வளர்ச்சியை காட்டுவதாகவும் அமைந்துள்ளன.

ஒரு மாத கணக்கீடுகளில் வலுவான கணிப்புகளை மேற்கொள்ள முடியாது என்ற நிலையில், மூன்று மாத சராசரி அளவுகளைக் கொண்டு இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மாபெரும் நுகர்வு காலமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் உள்நாட்டுத் தேவைகள் அதிகரிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மின்சார தேவை, ஜிஎஸ்டி வரி வருவாய், வேலையில்லா திண்டாட்ட விகிதம் போன்ற பல காரணங்களை பட்டியலிட்டு இந்த கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வணிக நடவடிக்கை

கடந்த செப்டம்பர் மாதத்தில் சேவை துறைகள் மற்றும் உற்பத்தி துறைகள் ஆகியவை மிதமான வளர்ச்சியை கண்டுள்ளன. இதன் எதிரொலியாக வணிக நம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஏழரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வணிகத்தின் மீதான நம்பிக்கை மேலோங்கியுள்ளது.

ஏற்றுமதி

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏற்றுமதி 3.5 சதவீதம் குறைந்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. ஒராண்டுக்கும் மேலான காலத்தில் இதுவே முதலாவது வீழ்ச்சியாகும். சில மேம்பட்ட பொருளாதார விஷயங்களில் தேவை குறைந்துள்ளது.

Also Read : தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!

நுகர்வோர் நடவடிக்கை

வங்கிகளில் லிக்யூடிட்டி அளவு தீவிரமாக்கப்பட்டாலும், அது தொடர்ந்து உயர்வாகவே காணப்படுகிறது. வங்கிக் கடனுக்கான தேவை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நிலவரப்படி 16.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2013 அக்டோபரில் இருந்து இதுவே அதிகப்பட்ச உயர்வாகும். சில்லறை வாகன விற்பனையானது 11 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வரி வசூல் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

சந்தை நிலவரம்

தொழில்துறை மற்றும் உற்பத்தி துறைகளில் கடந்த சில மாதங்களைக் காட்டிலும் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 185 ஜிகாவாட் அளவுக்கு இருந்த மின்சார தேவையானது செப்டம்பர் மாதத்தில் 185 ஜிகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Also Read : மீண்டும் சூடு பிடிக்கும் சில்லறை வணிகம்.. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வணிக நிறுவனங்கள்.!

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளைக் காட்டிலும் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது. தற்போது வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது என ப்ளூம்பெர்க் நியூஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Diwali festival, India, Indian economy