Home /News /business /

உங்கள் வீட்டில் கரண்ட் பில் அதிகமாக வந்து இருக்கா? உடனடியாக இதை செய்யுங்கள்

உங்கள் வீட்டில் கரண்ட் பில் அதிகமாக வந்து இருக்கா? உடனடியாக இதை செய்யுங்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

நீங்கள் உங்கள் வீட்டின் கரண்ட் செலவை குறைக்க வழிகளை தேடுகிறீர்களா..? இதே உங்களுக்கான டிப்ஸ்

கொரோனா தொற்று சூழலில் பலரும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். வழக்கமான மாதாந்திர செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறை காரணமாக பலரது கரண்ட் பில் இதுவரை இல்லாத அளவு இந்த கொரோனா காலத்தில் உயர்ந்துள்ளது. வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக வீடுகளில் ஃபேன், ஏசி, கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் இயங்கி கொண்டே இருப்பதால் எலெக்ட்ரிசிட்டி பில்லும் உயர்ந்து கொண்டே வருகிறது. நீங்கள் உங்கள் வீட்டின் கரண்ட் செலவை குறைக்க வழிகளை தேடுகிறீர்களா..?

இதற்காக சிறிய நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் சரியான மாற்றுகளை தேர்வு செய்வது உங்கள் மின் நுகர்வை குறைக்க உதவும். உங்கள் மின்சார கட்டணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. இதற்காக சரியான மாற்றுகளை தேர்வு செய்து ஆற்றல் சேமிப்பு (Saving energy) செய்வது சுற்றுச்சூழலுக்கும் உதவும். கரண்ட் பில்லை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முதல்படி உங்களால் முடிந்தவரை மின்சாரம் வீணாவதை தவிர்க்க வேண்டும். இது தவிர உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

Also Read : நிலையான வருமானம்...5 வருஷம் கழிச்சு ரூ. 20 லட்சம் கிடைக்க இந்த சேமிப்பை தேர்ந்தெடுங்கள்!

பயன்படுத்தாத போது சாதனங்களை ஆஃப் செய்யலாம்:

மின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான மிக அடிப்படையான மற்றும் பயனுள்ள எளிய வழி பயன்படுத்தாத போது சாதனங்களை ஆஃப் செய்து வைப்பது. லைட்கள், ஃபேன்கள், வீட்டு உபகரண சாதனங்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் பயன்படுத்தவில்லை அல்லது உங்களுக்கு இப்போது அதன் அவசியம் தேவை இல்லை என்று உணர்ந்தால் அவற்றை உடனடியாக ஆஃப் செய்து விடுங்கள். மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவற்றின் சுவிட்ச்சை ஆஃப் செய்வதன் மூலம் கரண்ட்டை சேமிக்கலாம். குறிப்பாக டிவி மற்றும் ஏசி உள்ளிட்ட சாதனங்ளை ரிமோட் மூலம் ஆஃப் செய்வதோடு மட்டுமின்றி, அவற்றின் மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்வதன் மூலம் கரண்ட் வீணாவதை தடுக்கலாம்.

ஆற்றல் சேமிக்கும் திறன் (energy efficient) கொண்ட தயாரிப்புகளை வாங்குங்கள்..

மின் சாதனங்களை எப்போது வாங்கினாலும் ஆற்றல் திறன் ரேட்டிங்கில் (energy efficiency rating) அதிகமான தயாரிப்புகளை வாங்குவதற்கு முன்னுரிமை கொடுங்கள். ஏனென்றால் ஆற்றல் திறன் ரேட்டிங் அதிகம் பெற்றிருக்கும் சாதனத்தின் மின் நுகர்வு குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1.5 டன் 5-ஸ்டார் ஏசி ஆண்டுக்கு சுமார் 800 யூனிட் கரண்ட்டை பயன்படுத்தினால், அதே திறன் கொண்ட 3-ஸ்டார் ஏசி ஆண்டுக்கு சுமார் 975 யூனிட் கரண்ட்டை இழுக்கும். ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட தயாரிப்புகளுக்கும் இது பொருந்தும்.

Also Read : தம்பதியினர் கவனத்திற்கு... 60 வயதில் மாதம் ரூ.10,000 வரை பென்சன் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஸ்மார்ட் டிவைஸ்களை பயன்படுத்தலாம்:

வீட்டில் இருக்கும் மின் சாதனங்களில் ஸ்மார்ட் ஆப்ஷன்கள் இருப்பது போல வாங்குவது நீண்ட காலத்திற்கு மின்சாரத்தை சேமிக்க உதவும். எடுத்துக்காட்டாக இரவில் ஏசி-யின் இயக்கத்தை திட்டமிட நீங்கள் ஸ்மார்ட் ஃபிளக் அல்லது யூனிவர்சல் வைஃபை ரிமோட்டைப் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் ஆப்ஷன்கள் மூலம் இரவு முழுவதும் ஏசி ஓடுவதற்கு பதில், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் தூங்கும் போது கூட ஏசியை ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடிகிறது. மோட்டார்கள், ரூம் ஹீட்டர்கள் மற்றும் பிற கனரக உபகரணங்களுக்கும் கூட நீங்கள் ஸ்மார்ட் ஆப்ஷன்களை பயன்படுத்தி கரண்ட் செலவை குறைக்கலாம்.

கிச்சன் உபகரணங்கள்:

கிச்சன் உபகரணங்களை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தலாம். நீண்ட நேரம் மைக்ரோவேவ், எலெக்ட்ரிக் கெட்டில், ஏர் ஃபிரையர் உள்ளிட்ட பிற ஹீட் டிவைஸ்களை பயன்படுத்துவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் இந்த கிச்சன் உபகரணங்கள் அதிக மின்சாரத்தை இழுக்கின்றன. எனவே உணவுகளை சூடாக்க வழக்கமான எரிவாயு அடுப்பை முடிந்த வரை பயன்படுத்துவது கரண்ட் செலவை குறைக்கும் வழிகளில் ஒன்று.

பழைய ஃபிரிட்ஜ்:

சிலரது வீட்டில் 10 அலல்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஃபிரிட்ஜ் நல்ல கண்டிஷனில் இருப்பதால் மாற்ற மனமில்லாமல் வைத்திருப்பார்கள். ஆனால் பழைய ஃபிரிட்ஜ்கள் மிக அதிக மின்சாரத்தை இழுக்கின்றன. நீங்கள் பழைய ஃபிரிட்ஜ் பயன்படுத்துபவர் என்றால், உங்கள் வீட்டு கரண்ட் பில்லில் சுமார் 30 முதல் 40 சதவீத கட்டணம் அந்த ஃபிரிட்ஜ் காரணமாகவே வந்திருக்கும்.

சோலார் போன்ற மாற்று மின்சக்தி ஆதாரத்திற்கு மாறிவிட்டால் உங்கள் கரண்ட் பில் நிறைய மிச்சமாகும். உங்கள் வீட்டை முழுமையாக சோலார் சிஸ்டத்திற்கு மாற்றாவிட்டாலும், பால்கனி அல்லது கார்டன் லைட்கள் மற்றும் அவுட்டோர் சோலார் லைட்கள், சோலார் ஃபேன்கள் அல்லது குறைந்த செலவிளான ஒரு சிறிய சோலார் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பலன் பெறலாம்.
Published by:Vijay R
First published:

Tags: Electricity bill, News On Instagram

அடுத்த செய்தி