முகப்பு /செய்தி /வணிகம் / Tokenization Security | டோக்கனைசேஷன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.?

Tokenization Security | டோக்கனைசேஷன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.?

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

Tokenization security | ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமல்படுத்திய டோக்கனைசேஷன் என்றால் என்ன, அது ஆன்லைன் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுகிறது, உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறதா என்று இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும் அவ்வப்போது ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் டோக்கனைசேஷன் என்பது. இந்த புதிய விதியை ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்து அமல்படுத்தியது. டோக்கனைசேஷன் என்றால் என்ன, அது ஆன்லைன் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுகிறது, உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறதா என்று இங்கே பார்க்கலாம்.

டோக்கனைசேஷன் என்றால் என்ன.?

டோக்கனைசேஷன் என்பது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை தனிப்பட்ட என்க்ரிப்ட் செய்யப்பட்ட கோடு மூலம் பாதுகாக்கிறது. இந்த என்க்ரிப்ஷன் தான் ‘டோக்கன்’ என்று கூறப்படுகிறது. பொதுவாக பேமெண்ட் கேட்வே என்பது வங்கி அல்லாத நீங்கள் வாங்கும் இணையதளம் அல்லாத, மூன்றாம் தரப்பு தளம் அல்லது செயலி ஆகும். டோக்கனைசேஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம், இனி நீங்கள் மூன்றாம் தரப்பினருடன் உங்கள் கார்டு விவரங்களை பகிர வேண்டாம்.

நீங்கள் ஆன்லைனில் ஏதாவது வாங்க முயற்சித்தால், முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தகவலைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை எளிதாக குறைந்த நேரத்தில் மேற்கொள்ள முடியும். இந்த கார்டு விவரங்கள் ஏற்கனவே அந்தந்த ஷாப்பிங் தளம் அல்லது ஆப்ஸ்களில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இனி, கார்டின் நேரடி விவரங்களுக்கு பதிலாக, என்க்ரிப்ட் செய்யப்பட்ட டோக்கனை தான் மெர்ச்சன்ட்கள் அக்சஸ் செய்ய முடியும். எனவே, உங்கள் கார்டு விவரங்கள் பாதுகாப்பாக இணையத்தில் சேமிக்கப்படும்.

டோக்கனைசேஷனுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி :

கார்டு விவரங்களை நீக்க ஏற்கனவே உத்தரவு வந்துள்ள நிலையில், ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு டோக்கன் எண் வழக்கப்படும். அதன்படி, உங்கள் கார்டு விவரம் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். கார்டு எண், CVV உள்ளிட்ட எந்த விவரமும் மூன்றாம் தரப்பு அமைப்பு அல்லது செயலிகளுக்குத் தெரிய வராது. உங்கள் கார்டுக்கு பதிலாக, உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும். இந்த விதிமுறைகளை RBI வெளியிட்டு அனைத்து நெட்வொர்குகளும் செயல்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

Also Read : யாருக்கு எந்த ITR படிவம்? உங்களுக்கு எந்த படிவம்? விவரங்கள் இதோ..

டோக்கனைசேஷன் அம்சத்தை, வங்கிகள், கிரெடிட் கார்டுகள், பேமென்ட் தளங்கள், மூன்றாம் தரப்பு மெர்ச்சண்ட்கள், உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.

ஜனவரி 1 முதல், உங்கள் கார்டு விவரங்கள் எந்த தளத்திலும் சேமிக்கப்படாது. எனவே நீங்கள் ஒவ்வொரு முறை கார்டு பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும் உங்கள் கார்டின் முழு விவரங்களை வெளியிட வேண்டும் அல்லது நீங்கள் டோக்கன் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சத்தை அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து வருகின்றன.

Also Read : ஹோம் லோனில் EMI கட்ட தாமதமானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

டோக்கனைசேஷன் பாதுகாப்பாக இருந்தாலும் அனைவருக்கும் கட்டாயமல்ல. அதாவது ஆன்லைன் கார்டுகள் பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தும் அனைவரும் தங்கள் கார்டுகளுக்கு என்க்ரிப்ஷன் பெற்று டோக்கன் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது முழுக்க முழுக்க தனிப்பட்ட விருப்பம். ஆனால், பெரும்பாலான செலவுகளை ஆன்லைனில் மேற்கொள்பவர்கள், டோக்கனைசேஷன் மூலம் தங்கள் வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் கணக்குகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

First published:

Tags: Credit Card, Online Transaction