ஹோம் /நியூஸ் /வணிகம் /

தொழிற்சாலை கூரைகளில் இந்த கொண்டையை பார்த்திருக்கீங்களா...?

தொழிற்சாலை கூரைகளில் இந்த கொண்டையை பார்த்திருக்கீங்களா...?

டர்பைன் வென்டிலேட்டர்

டர்பைன் வென்டிலேட்டர்

தொழிற்சாலைகளின் கூரை மீது ‘மண்டை மேல இருக்குற கொண்டை மாதிரி’ வட்ட வடியில் சுற்றிக்கொண்டிருக்கும் டர்பைன் வென்டிலேட்டர்களை பார்க்கும் போது இதனை ஏன் பிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று என்றாவது சந்தேகம் வந்திருக்கிறதா?.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தொழிற்சாலைகளின் கூரை மீது ‘மண்டை மேல இருக்குற கொண்டை மாதிரி’ வட்ட வடியில் சுற்றிக்கொண்டிருக்கும் டர்பைன் வென்டிலேட்டர்களை பார்க்கும் போது இதனை ஏன் பிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று என்றாவது சந்தேகம் வந்திருக்கிறதா?.

  தொழிற்சாலைகளில் டர்பைன் வென்டிலேட்டர்கள் பொருத்தப்படுவது ஏன்?... அதனால் என்னெனன் பலன்கள்?... என விரிவாக பார்க்கலாம்....

  தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி யூனிட்களில் குளிரூட்டிகளை பொருத்தும் வசதி கிடையாது. ஆனால் தொழிற்சாலைகளில் தொடர்ந்து 24 மணி நேரமும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருப்பதாலும், முற்றிலும் அடைக்கப்பட்ட இடம் என்பதாலும் உட்புற வெப்ப நிலை கடுமையான அளவிற்கு உயரக்கூடும். இதனால் பணியாளர்கள் வேலையை தொடர்ந்து செய்ய இயலாது. இந்த சிக்கலை தீர்த்து தொழிற்சாலையின் உட்புறத்தை குளிர்விப்பதற்காகவே டர்பைன் வென்டிலேட்டர்கள் அவற்றின் கூரையில் நிறுவப்படுகின்றன.

  இதன் மூலமாக டர்பைன் வென்டிலேட்டர்கள் தொழிற்சாலைக்குள் உற்பத்தியாகும் சூடான காற்றை உறிஞ்சி வெளியேற்றுகிறது. அதாவது சூடான காற்று மிகவும் லேசானது என்பதால் எளிதில் மேல் நோக்கி நகரும். அதனை எளிதாக வெளியேற்றுவதற்காகவே டர்பைன் வென்டிலேட்டர்கள் தொழிற்சாலை கூரைகளின் மேற்புறத்தில் பொருத்தப்படுகின்றன.

  இதனால் தொழிற்சாலையின் உட்புறம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியூட்டுகிறது. இதனால் தொழிலாளர்களின் செயல் திறன் அதிகரிப்பதோடு, அதிக வெப்பம் காரணமாக இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

  டர்பைன் வென்டிலேட்டர்களின் மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை இயக்குவதற்கு என தனியாக மோட்டர்களை பொருத்த வேண்டியதோ, மின்சார செலவோ இல்லை. சிறிதளவு காற்று அடித்தலே போது, அந்த விசையே அதனைச் சுழச்செய்கிறது. இதனால் தான் இதனை தமிழில் ‘விசையாழி’ என அழைக்கிறோம்.

  அதேபோல் மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய எக்ஸ்டாஸ்ட் பேன்களை விட டர்பன் வென்டிலேட்டர்கள் சிறப்பானவையாகும். பெரும்பாலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகிலுள்ள சுவர்களில் பொருத்தப்பட்டிருக்கும் எக்ஸ்டாஸ்ட் பேன்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வெப்பக்காற்றை மட்டுமே அகற்ற உதவுகிறது.

  ஆனால் டர்பன் வென்டிலேட்டர்கள் தொழிற்சாலையின் உச்சி வரை பரவி இருக்கும் வெப்பத்தை ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இழுந்து அகற்றுகிறது.

  ஒருவேலை மின்சாரம் தடைபட்டாலோ, மோட்டார் பழுதானாலோ எக்ஸ்டாஸ்ட் பேன்கள் வேலை செய்யாமல் நின்றுவிடும். ஆனால் காற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கக்கூடிய டர்பைன் வென்டிலேட்டர்கள் தொழிற்சாலையில் வேலை நடந்தாலும் சரி, ஆளே இல்லாவிட்டாலும் சரி வெப்பக்காற்றை வெளியேற்றும் வேலையை 24X7 செய்து கொண்டே இருக்கும்.

  மின்சார நுகர்வு முதல் செயல்திறன் வரை, டர்பைன் வென்டிலேட்டர்கள் சிறந்த வகை என நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மின்தட்டுப்பாடு மற்றும் மின் கட்டண உயர்வை பார்க்கும் போது எக்ஸ்டாஸ்ட் பேனை விட டர்பைன் வென்டிலேட்டர்களை பொருத்துவது தான் சிக்கனமானது என ஆலை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

  Read More: தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்!

  ஏற்கனவே இயந்திரங்கள் மூலம் செயல்படும் தொழிற்சாலைக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், எக்ஸ்டாட்ஸ் பேன்களை தவிர்த்து டர்பைன் வென்டிலேட்டர்களை பயன்படுத்துவது சிறந்தது. கூரையின் மீது பெருத்தப்படும் டர்பைன் வென்டிலேட்டர்கள் வட்ட வடிவில் கவர் செய்யப்பட்டுள்ளதால் கடுமையான மழையில் இருந்தும் தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

  Published by:Srilekha A
  First published: