இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் தெரியுமா?

சாதாரண பட்ஜெட்டிற்கும், இடைக்கால பட்ஜெட்டிற்கு என்ன வித்தியாசம்?

news18
Updated: January 9, 2019, 9:06 PM IST
இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் தெரியுமா?
மாதிரிப் படம்
news18
Updated: January 9, 2019, 9:06 PM IST
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?

அரசால் முழுமையான நிதிநிலையை தயாரிக்க முடியாதபோது அல்லது மக்களவை தேர்தல் சில மாதங்களில் வர உள்ளபோது அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த பட்ஜெட்டில் முக்கியமான தேவைகளுக்கு முதலில் நிதி ஒதுக்கப்படும். அதேநேரம் மக்கள் பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகளையும் எதிர்பார்க்கலாம்.

ஏன் இடைக்கால பட்ஜெட் தேவை?

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது ஒதுக்கப்படும் நிதியை அந்த நிதி ஆண்டின் இறுதி வரை அதாவது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே செலவு செய்ய முடியும். ஒருவேளை முழு பட்ஜெட்டை அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் புது வருடம் தொடங்கும்போது துறை ரீதியான செலவுகளுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டி வரும். இடைக்கால பட்ஜெட்டின்போது பாராளுமன்றத்தில் vote-on-account மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அடுத்த நிதி ஆண்டுக்கு தேவையான நிதியைப் பெற பாராளுமன்றம் எளிதாக வாக்கெடுப்பின் மூலம் அனுமதியை வழங்கும். தேர்தல் நேரங்களில் vote-on-account அனுமதி 4 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

சாதாரண பட்ஜெட்டிற்கும், இடைக்கால பட்ஜெட்டிற்கும் என்ன வித்தியாசம்?

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்போது vote-on-account-இன் கீழ் அரசின் செலவுகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். இதுவே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அரசுக்கு தேவையான நிதியைக் கையாள முழு அனுமதியும் பாராளுமன்ற அனுமதி இல்லாமல் வழங்கப்படும்.
Loading...
அரசால் புதிய வரி மற்றும் கொள்கைகளை அறிமுகம் செய்ய முடியுமா?

இடைக்கால பட்ஜெட்டில் வரி விகிதங்களில் மாற்றம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் சில மாதங்களுக்குள் தேர்தல் வரும் என்பதால் பெரிய மாற்றங்கள் இருக்காது. மேலும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியாது.

மேலும் பார்க்க: 

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...