• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கொரோனா காலத்தில் வணிகர்களுக்கு டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் எவ்வாறு உதவுகிறது ?

கொரோனா காலத்தில் வணிகர்களுக்கு டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் எவ்வாறு உதவுகிறது ?

காட்சி படம்

காட்சி படம்

டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் என்பது வேகமாக வளர்ந்து வரும் வணிகச் சுழ்நிலை அமைப்பில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் நிறுவனங்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

  • Share this:
    ‘டிஜிட்டல்’ எனும் சொல் இப்போது அனைத்து வணிகங்களுக்கும் இன்றியமையாததாகிவிட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் தரவு, டிஜிட்டல் மீடியா, டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் என எதுவாக இருந்தாலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் டிஜிட்டல் நிலப்பரப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. கோவிட் -19 பெருந்தொற்று டிஜிட்டல் பயன்பாட்டின் வேகத்தை மேலும் துரிதப்படுத்தியுள்ளது, புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தல் என்பதில் தொடங்கி வாடிக்கையாளர் சேவை வரை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் புதுப்பித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் என்பது போட்டித் தன்மையைப் பராமரிக்கவும், வேகமாக வளர்ந்து வரும் வணிகச் சுழ்நிலை அமைப்பில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் நிறுவனங்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

    NTT DATA Business Solutions என்பது, SAP மேம்படுத்தல்களிலும் மற்றும் கிராஸ்-இண்டஸ்ட்ரி வணிகங்களின் செயல்முறைகள் மற்றும் காட்சிப்படுத்தல்கள் தொடர்பான ஆழமான-அறிவிலும், தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், SAP தீர்வுகளை வடிவமைத்தல், செயல்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் மேம்படுத்துவதன் மூலம் நிறுவன மதிப்பில் தொடர்ச்சியான ஆதாயங்களை அடைய நிறுவனங்களுக்கு உதவும் சிந்தனைத் தலைவராக உருவெடுத்துள்ளது. பெருந்தொற்று காலத்தின் போது தங்கள் சவால்களை எதிர்கொள்ளவும் ஒரு போட்டிகரமான வணிகச் சூழ்நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் பல்வேறு துறைகளைச் சார்ந்த வணிகங்களுக்கு NTT DATA உதவியது.

    எனவே, வளர்ந்து வரும் புதிய-கால தொழில்நுட்பங்கள் பிசினஸ் லேண்ட்ஸ்கேப்பை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள, NTT DATA Business Solutions, Moneycontrol உடன் இணைந்து, Future Techshot உச்சிமாநாட்டில், 22 செப்டம்பர் 2021 அன்று, தங்களின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் பயணங்கள் மற்றும் வணிகங்களை நெறிப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பேச தொழிற்துறை தலைவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஒன்றிணைத்தது.

    தலைமை விருந்தினரான, தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி, திரு. அகர்வால் மற்றும் Moneycontrol இன் ருச்சிரா சர்மா ஆகியோருக்கிடையிலான விரிவான உரையாடலுடன் உச்சிமாநாடு தொடங்கியது. தங்கள் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு, தற்போதுள்ள செயல்முறைகளில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காண உதவும் வணிகத் தேவையைப் பற்றி திரு. அகர்வால் அழுத்தமாகக் கூறினார். மேலும் அவர் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் பற்றியும் வணிகங்களின் எதிர்காலம் பற்றியும் நீண்ட நேரம் பேசினார்.

    பெருந்தொற்று டிஜிட்டல் நடைமுறைக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும் அதேவேளையில், இது வணிகங்கள் எதிர்பாராத சப்ளை செயின் பாதிப்புகள் மற்றும் இடையூறுகளை எதிர்கொள்ளவும் வழிவகுத்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய இடையூறுகளைத் தவிர்க்கவும், தற்போதைய சவால்களை எதிர்கொள்ள உதவும் தொழில்நுட்பத்தைப் பற்றி விவாதிக்கவும், உச்சிமாநாட்டின் அடுத்த பிரிவு, PepsiCo India நிறுவனத்தின் மூத்த இயக்குநர் மற்றும் CIO கௌதம் கார்க், Mother Dairy Fruit and Vegetable Pvt. Ltd.நிறுவனத்தின் CIO ஆனி மேத்யூ; Godrej Interior இன் தயாரிப்பு விநியோகிப்பாளர், ஜுர்வன்மரோலியா; Biocon நிறுவனத்தின் குளோபல் புரோகியூர்மென்ட் அண்ட் சப்ளை செயினின் தலைவர், மூத்த VP, பிரசாத் S. தேஷ்பாண்டே; SAP, டிஜிட்டல் லாஜிஸ்டிக்ஸ், சொல்யூஷன் மேனேஜ்மென்ட், இயக்குநர், ஆனந்த்குந்து ஆகியோரை 'சிறந்த சப்ளை செயின் திட்டத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்' பற்றிய விரிவான குழு விவாதத்திற்கு ஒன்றிணைத்தது. வணிகங்கள் சுறுசுறுப்பாக இயங்கவும் எதிர்காலத்திற்கு தயாராகவும் இருக்க வேண்டிய தேவையைப் பற்றி குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். டிஜிட்டல் சப்ளை செயின்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வலுவான இடர் மேலாண்மை கட்டமைப்புகள் வணிகத்தை எதிர்கால இடையூறுகளிலிருந்து பாதுகாக்கும் முக்கிய காரணிகளாக வெளிப்பட்டன.


    அடுத்த பிரிவில், NTT DATA Business Solutions என்பதின் துணை இயக்குநர், திரு. ஜிகர் ஷா அறிவுப்பூர்வமான சப்ளை செயின்கள் மற்றும் தொடக்கம் முதல் இறுதி வரையிலான தொடர் கண்காணிப்பு ஆகியவற்றைப் பற்ற விளக்கமளித்தார். மேலும் அவர் NTT DATA Business Solutions வணிகங்கள் தங்கள் டிஜிட்டல் ரோட்மேப்பை வரையறுக்கவும் ஆட்டோமேஷனை அதிகரிக்கவும் உதவக்கூடிய வகையில் சிறந்த தீர்வுகளுடன் வருவதாக கூறினார்.

    மொபைல் கம்ப்யூட்டிங், பெரிய தரவு மற்றும் வணிக பகுப்பாய்வு உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வணிகங்களின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டின் இந்த துரிதப்படுத்தலுக்கு ஏற்ப CFO களின் பங்குகள் வேகமாக மாறி வருகின்றன. எனவே, NTT DATA ஆனது தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைத்து, 'CFO க்கள் மூலோபாய வணிக முடிவுகளை எடுக்க தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்' என்று காரசாரமாக விவாதித்தது. இந்த குழுவில் Schindler India Private Limited நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, சந்தியா ஷர்மா; Jindal Stainless குழுவின் CFO, அனுராக் மந்த்ரி; Metropolis Healthcare Limited நிறுவனத்தின் CEO, ராகேஷ் அகர்வால்; ERP and Finance SAP இன் தொழிற்துறை மற்றும் வாடிக்கையாளர் ஆலோசகர், இயக்குநர் கேவல் ஷா; மற்றும் Schneider Electric India நிறுவனத்தின் SCFO, சுகட்டாசிர்கார் ஆகியோர் உள்ளடங்கினர். இன்றையகால CFO க்கள் எவ்வாறு வெறும் கார்ப்பரேட் புக்கீப்பர்கள் மட்டுமல்லாமல் வணிகத் தலைமையின் முக்கிய பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் தொடர்ச்சியான இடையூறுகளுக்கும் ஆபத்துகளுக்கும் எதிராக எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த விவாதம் வெளிச்சம் போட்டு காட்டியது.

    இந்த உரையாடலைத் தொடர்ந்து, NTT DATA Business Solutions இன் VP, ரவீந்திர வெர்மா மற்றும் Mid-Market India Sub Content இன் VP, சுப்பிரமணியன் ஆனந்தமத்மநாபன் முக்கிய விவரங்களை வழங்கினர். திரு. வர்மா அவர்கள், NTT DATA Business Solutions என்பது எவ்வாறு டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன்களை ஊக்குவிப்பதற்கும், பெருந்தொற்றால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவும் வணிகங்களுக்கு உதவுவதற்காக SAP தீர்வுகளின் புத்திசாலித்தனமான திறன்களுடன் ஆட்டோமொபைல், பார்மாகியூட்டிகல்ஸ், CPG மற்றும் உற்பத்தி போன்ற தொழிற்துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதைப் பற்றி பேசினார். மறுபுறம், திரு. சுப்பிரமணியன் அவர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் MSME களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் அவற்றின் மகத்தான திறன் மற்றும் உலகளாவிய அளவில் நாட்டிற்கு அதிக வெற்றிகளைப் பெறுவதில் அவற்றின் உதவி ஆகியவற்றைப் பற்றியும் விளக்கினார்.

    Moneycontrol வணிகச் செயல்முறைகளை மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, ‘மாற்றத்தின் முன்னோடிகளாக’ வெளிவருவதற்காக, பெருந்தொற்றின் போது தொழில்நுட்பத் தீர்வுகளை ஏற்றுக்கொண்ட நாட்டின் டிஜிட்டல் டார்ச் பியர்களுக்கு விருது வழங்கி இந்த உச்சிமாநாட்டை நிறைவு செய்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: