2023-2024 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு அல்வா கிண்டி தயாராகிவிட்டது. பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் இறுதி முழு பட்ஜெட் இதுதான். வருமான வரி ஸ்லாப் மாற்றம், கடன்கள் தள்ளுபடி, வரிச்சலுகைகள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் தங்கள் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருடா வருடம் தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆவணங்கள் உள்ளடக்கி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 112 இன் படி, சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் இது ஒரு பெரிய செயல்முறை சிக்கலின் மிகச் சிறிய கூறை குறிக்கும். குறிப்பிட்ட ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் என்பது அந்த குறிப்பிட்ட ஆண்டிற்கான அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய்கள் மற்றும் செலவினங்களின் சுருக்கத்தைக் குறிக்கும். வருடாந்திர நிதிநிலை அறிக்கை(annual financial statement) என்பது யூனியன் பட்ஜெட்டின் மற்றொரு பெயர்,
வருடாந்திர நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு, மற்றொரு முக்கிய ஆவணம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இது முதன்மையாக இந்திய பொருளாதாரத்தின் நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆவணத்தின் பெயர் இந்திய பொருளாதார ஆய்வு அறிக்கை (Economic Survey) என்பதாகும்.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?
மத்திய பட்ஜெட்டைப் போலவே, பொருளாதார ஆய்வறிக்கையும் மத்திய நிதி அமைச்சகத்தால் தயாரிக்கப்படுகிறது. அதோடு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை, இந்த கணக்கெடுப்பை விரிவாக ஆராய்கிறது.
பொருளாதார ஆய்வின் நோக்கம் என்ன?
இந்தியப் பொருளாதார ஆய்வு, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, நிதி வளர்ச்சிகள் மற்றும் பண மேலாண்மை மற்றும் மற்ற துறைகளின் வளர்ச்சி நிலைகளைப் பரந்த அளவில் ஆராய்ந்து தயாரிக்கப்படும்.
அதோடு பொருளாதார ஆய்வு முந்தைய ஆண்டின் பொருளாதாரத்தின் நிலையை மதிப்பாய்வு செய்கிறது. அதே நேரத்தில் எதிர்காலத்தின் முக்கிய வாய்ப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. இது தேவையான முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் விரிவான புள்ளிவிவர தரவு மூலம் முந்தைய முடிவுகளின் தாக்கத்தை மதிப்பிடுகிறது.
தெளிவாக சொல்லவேண்டும் என்றால் இது மூன்று நிதி ஆண்டு பட்ஜெட்டுகளுக்கு ஈடானது. இப்போது இந்த ஆண்டு வெளியிடப்படும் பொருளாதார ஆய்வறிக்கையில் 2022-23 க்கான மதிப்பாய்வு, 2024-25 க்கான எதிர்கால திட்டங்கள் , இவை இரண்டையும் அடிப்படியாக வைத்து வரையறுக்கப்படும் 2023-24 க்கான பட்ஜெட் கொள்கைகள் அடங்கும்.
பொருளாதார ஆய்வறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும்?
இந்த ஆவணம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படுகிறது. இது இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது.
பொருளாதார ஆய்வறிக்கையை முன்வைப்பது யார்?
பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31ஆம் தேதி சமர்பித்தார். இந்த ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்.
இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வு 1950-51 இல் சமர்ப்பிக்கப்பட்டது. 1964 வரை, இந்த ஆவணம் யூனியன் பட்ஜெட்டுடன் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அது பிரிக்கப்பட்டு, பின்னர் பட்ஜெட் அறிவிப்புக்கு முன் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget Session, Union Budget 2023