Home /News /business /

யெஸ் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

யெஸ் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

யெஸ் வங்கி (Reuters)

யெஸ் வங்கி (Reuters)

யெஸ் வங்கி ஊழியர்களுக்கு நிச்சயமாக சம்பளம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    யெஸ் வங்கியின் பணப் பரிவர்த்தனைகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி தற்காலிகத் தடை விதித்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் யெஸ் வங்கியுடன் தொடர்புடைய அத்தனை வாடிக்கையாளர்களும் சந்திக்க வேண்டும்.

    இத்தகைய சூழலில் யெஸ் வங்கியுடன் ஏதோ ஒரு வகையில் நீங்கள் தொடர்பில் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

    அடுத்த ஒரு மாதத்துக்கு யெஸ் வங்கியில் உள்ள உங்கள் பணத்திலிருந்து நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே எடுக்க முடியும். உங்களுக்கு கடன் வழங்கப்பட மாட்டாது. யெஸ் வங்கியுடன் முதலீடுகள் எதுவும் மேற்கொள்ள முடியாது. மாத ஈஎம்ஐ 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமானதாய் உங்கள் யெஸ் வங்கி கணக்கிலிருந்து செலுத்த வேண்டுமென்றால் அதற்கு அனுமதி இல்லை.

    உங்கள் சம்பளக் கணக்கு யெஸ் வங்கியில் இருந்தால் நீங்கள் மாற்று ஏற்பாடுதான் செய்துகொள்ள வேண்டும். 50 ஆயிரத்துக்குள் சம்பளம் என்றால் பிரச்னை இல்லை. உங்கள் மியூச்சுவல் பண்டு கணக்கு யெஸ் வங்கியின் கீழ் இயங்கினால் கண்டிப்பாக உங்கள் மியூச்சுவல் பண்டு கணக்கை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றலாம்.

    ஆனால், உங்களது முதலீடுகள் நிச்சயமாகப் பாதுகாப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்குள் யெஸ் வங்கியை மீட்பதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும். இல்லையேல் மாற்று வழிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    யெஸ் வங்கி ஊழியர்களுக்கு நிச்சயமாக சம்பளம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை யெஸ் வங்கி திவால் ஆகிறது என்றால் வங்கிக் கணக்கு அல்லது லாக்கர் ஒன்றுக்கு இன்சூரன்ஸ் காப்பீட்டு வரம்பு  5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.

    மேலும் பார்க்க: மீளுமா யெஸ் வங்கி..? அரசு அனுமதியுடன் காப்பாற்ற முன்வந்துள்ள எஸ்.பி.ஐ..!
    Published by:Rahini M
    First published:

    Tags: Yes Bank

    அடுத்த செய்தி