Home /News /business /

டி.என்.சி நிதி நிறுவனத்தின் ஆண்டு மாநாடு.. தர்மபுரியில் கோலாகலம்!

டி.என்.சி நிதி நிறுவனத்தின் ஆண்டு மாநாடு.. தர்மபுரியில் கோலாகலம்!

டி.என்.சி மாநாடு

டி.என்.சி மாநாடு

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் டிஎன்சி நிதி நிறுவனத்தின் ஆண்டு மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

    சேமிப்பின் பயன்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வாரி வழங்கிவரும் டிஎன்சி நிதி நிறுவனத்தின் ஆண்டு மாநாடு, தர்மபுரியில் கோலாகலமாக நடைபெற்றது. டிஎன்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. DC இளங்கோவன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் திரு. பிரேம், திருமதி. மீனா இளங்கோவன், திருமதி. ஸ்னேகா பிரவீன் முன்னிலை வகித்தனர்.நிறுவனத்தின் செயல்பாட்டு தலைவர் திரு. பிருத்வி ராஜ் வரவேற்புரை வழங்கினார். மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் கலந்துகொண்டு, பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கம் தரும் வகையில் பேசினார்.

    ஸ்ரீ விஜய் வித்யாலயா குழுமத்தின் தலைவர் டிஎன்சி மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார். 2021 22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை செயல்பாட்டு தலைவர்கள் திரு. விவேகானந்தன் திரு. கே பார்த்திபன் வாசித்தனர். நிறுவனத்தில் பணிபுரிந்து மறைந்த ஊழியரின் குடும்பத்திற்கு மேலாண்மை இயக்குனர் திரு. இளங்கோவன், இயக்குனர் திருமதி. மீனா இளங்கோவன் ஆகியோர் நிதி உதவி வழங்கினார்கள்.



    நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் முரளி, செயல்பாட்டு தலைவர்கள், அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் வணிகத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்ததற்கான விருதினை, நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் திரு. பார்த்திபன் மற்றும் சென்னை மண்டல வளர்ச்சி அதிகாரி நவநீதன் பெற்றுக்கொண்டனர். சிறப்பான முறையில் பணிபுரிந்த அனைத்து வளர்ச்சி அதிகாரிகளும் பாராட்டுப் பெற்றனர்.

    நிறைவாக நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் பிரதாப் ராஜ் நன்றியுரை வழங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் டிஎன்சி நிதி நிறுவனத்தின் ஆண்டு மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Tamilnadu

    அடுத்த செய்தி