ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீபாவளிக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறீர்களா.? இந்த விஷயங்களை முதலில் கவனிங்க

தீபாவளிக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறீர்களா.? இந்த விஷயங்களை முதலில் கவனிங்க

தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி ஷாப்பிங்

Diwali Shopping Alert | சிறிதளவு கவனம் குறைந்தாலும், நம்முடைய பணத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து, பின்பவரும் பாதுகாப்பு உத்திகளை நாம் பின்பற்ற வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் ஷாப்பிங் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் ஸ்டோர்களில் பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆன்லைன் ஸ்டோர்களில் வழங்கப்படும் ஆஃபர்கள், டிஸ்கவுண்டுகள், கேஷ் பேக் போன்ற பலன்களை பெறும் நோக்கில் இதில் பொருட்களை வாங்க விரும்புகின்றனர்.

குறிப்பாக அமேசான் நிறுவனம் சார்பில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரிலும், ஃபிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் பிக் தீபாவளி சேல் என்ற பெயரிலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் ஸ்டோர்களில் குறிப்பிட்ட சில பேமெண்ட் முறைகளை தேர்வு செய்யும்போது கூடுதலான ஆஃபர்கள், டிஸ்கவுண்டுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

சலுகைகளை பெற ஆர்வம் காட்டும் அதே வேளையில், மோசடியாளர்களிடம் சிக்கி உங்கள் பணத்தை இழந்து விடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைக்கு பொருட்களை வாங்கும்போது பணம் செலுத்துவதற்கு 3இல் இரண்டு பங்கு பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மூலமாக மட்டுமே நடைபெறுகின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அடித்தளமாக நாம் பயன்படுத்துவது மொபைல் ஃபோன்கள் தான். ஆக, நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடியாளர்கள் அல்லது நிறுவனங்களின் மோசடி வலைகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது.

சிறிதளவு கவனம் குறைந்தாலும், நம்முடைய பணத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து, பின்பவரும் பாதுகாப்பு உத்திகளை நாம் பின்பற்ற வேண்டும்.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

பாதுகாப்பான பண பரிவர்த்தனைக்கு என்ன வழி

பேமெண்ட் செய்வதற்கான ஆப்களை டவுன்லோடு செய்ய நம்பிக்கைக்குரிய ஸ்டோர்களை மட்டும் பயன்படுத்தவும். சந்தேகத்துக்கு இடமான லிங்கிற்கு சென்றால் உடனடியாக வெளியேறவும்.
பரிவர்த்தனை செய்யும்போது பப்ளிக் ஷேர்டு சாதனங்கள் அல்லது ஓப்பன் வைஃபை போன்றவற்றை தவிர்க்கவும். இதில் உங்கள் டேட்டா திருடு போவதற்கு வாய்ப்பு உண்டு.
ஒருபோதும் யாரிடமும் ஓடிபி பாஸ்வேர்டு பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கை மிகுந்த நிறுவனங்கள் அல்லது ஆப்கள் சார்பில் ஒருபோதும் ஓடிபி கேட்டு ஃபோன் கால் வராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் தனிநபர் விவரங்களை பார்ப்பதற்கான அனுமதியை நீங்கள் வழங்கும்போது, அது பணத்தை இழப்பதற்கு அடித்தளமாக அமைந்துவிடும்.
டிஜிட்டல் பேமெண்ட் செய்யும்போது அவசரம் காட்ட வேண்டாம். உங்களின் அனைத்து பேமெண்டுகளுக்கும் ரிசிப்ட் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
புதிதாக டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள் கேட்கும் பெர்மிஷன்கள் குறித்து கவனமாக படித்து பார்க்கவும். யெஸ் டு ஆல் என்ற ஒற்றை ஆப்சனை தேர்வு செய்ய வேண்டாம். டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவும்.
Published by:Selvi M
First published:

Tags: Diwali purchase, Online Frauds, Online shopping, Tamil News