ஹோம் /நியூஸ் /வணிகம் /

சரியான டைம்.. பணம் கொட்டும்! உங்களுக்கான முகூர்த்த டிரேடிங் வந்தாச்சு - இதோ முழு விபரம்.!

சரியான டைம்.. பணம் கொட்டும்! உங்களுக்கான முகூர்த்த டிரேடிங் வந்தாச்சு - இதோ முழு விபரம்.!

முகூர்த்த டிரேடிங்

முகூர்த்த டிரேடிங்

Diwali Muhurat Trading 2022 | லட்சுமி தேவியை வழிபடும் தீபாவளி திருநாளில் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்வது மங்களகரமானதாக கருதப்படுவதால் பல முதலீட்டாளர்களுக்கு முகூர்த்த டிரேடிங் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் மிக கோலாகலமாக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. புத்தாடை உடுத்தி, விதவிதமான இனிப்புகள் செய்தும் பட்டாசுகள் வெடித்து குதூகலமாகக் கொண்டாடும் இந்நாளில் லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என நினைப்பது வழக்கம். இதுப்போன்றவர்களுக்காக மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ ஆல் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் தீபாவளியை முன்னிட்டு பங்கு வர்த்தகத்திற்கு என்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி முகூர்ந்த டிரேடிங்கை அறிமுகம் செய்தது.

இதே போன்று தேசிய பங்குச் சந்தை என்எஸ்ஜ யும் 1992 ஆம் ஆண்டு முதல் தீபாவளி நாளில் தொடங்கியது. இதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் முகூர்த்த வர்த்தகத்தின் போது சிறப்பான முதலீடுகளை செய்ய முன்வருகின்றனர். இவ்வாறு செய்யும் அனைத்து முதலீடுகளும் நல்ல செழிப்பை தருவதாகவே இவர் நம்புகின்றனர். மேலும் லட்சுமி தேவியின் அருளால் நல்ல நாளாக அமையும் என்றும் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

முகூர்த்த டிரேடிங்கின் சிறப்புகள்:

தீபாவளி திருநாளன்று மேற்கொள்ளப்படும் முகூர்த்த வர்த்தக நாளில் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது மங்களரமானது என்கின்றனர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நபர்கள். ஒவ்வொரு ஆண்டும் சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய மற்றும் மூத்த முதலீட்டாளர்கள் வரை அனைவரும் தவறாமல் முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய முதலீட்டில் அதிக லாபம் அளிக்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளில் ஒரு மணி நேரம் முதலீடு செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. எனவே இந்தாண்டு தீபாவளி திருநாளன்று நடைபெறும் முகூர்ந்த டிரேடிங் எப்பொழுது? நேரம்? குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

முகூர்த்த டிரேடிங் தேதி மற்றும் நேரம்:

தீபாவளி திருநாளில் நடைபெறும் முகூர்ந்த டிரேடிங் இந்தாண்டு அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. என்எஸ்இ மற்றும் பிஎஸ் இ ல் ஈக்விட்டி, டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 மணி நேரம் வரையில் வர்த்தகம் நடைபெறவுள்ளது. மேலும் ப்ரீ ஓபனிங் செசன் மாலை 6 மணிக்கே தொடங்கி 6.08 மணிக்கு முடிவடையவுள்ளது.

Also Read : ஈஸியா கிடைச்சிடும்..! - இந்த 5 தேவைகளுக்கு மட்டுமே கோல்டு லோன் பெறுவது நல்லது!

இதேப்போன்று கமாடிட்டி டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்துக் கொள்ளலாம். இதில் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 24 அன்று மாலை 7.25 வரையில் வர்த்தகப் பரிமாற்றம் செய்யலாம். இதோடு கரன்சி டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கான வர்த்தகப் பரிமாற்றம் 7.25 வரையில் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி திருநாளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தேதியை மறந்துவிடாதீர்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Deepavali, Diwali, India