Disney plus hotstar மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற இலவச ஸ்டீரிமிங் சேவைகளுடன் எண்ணற்ற ப்ரீபெய்டு திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. குறிப்பாக, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில், இந்த இலவச திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வது பயனாளர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.
இந்தியாவில் மூன்று விதமான பிளான்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்குகிறது. அதாவது சூப்பர், ப்ரீமியம் (மாதாந்திர திட்டம்) மற்றும் ப்ரீமியம் (ஆண்டு திட்டம்) என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படை திட்டம் ரூ.899 என்ற தொகையில் இருந்து ஆரம்பம் ஆகிறது. அதிகபட்சமாக ரூ.1,499 க்கு ஒரு திட்டம் இருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் பிளானை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை தனிப்பட்ட ஹாட்ஸ்டார் சந்தாவை வாங்குவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மிற்கு இலவச ஆக்சஸ் வழங்கும் ஒரு ப்ரீபெய்டு திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க.. ஆக்சிஸ் வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இப்படியொரு சலுகையா?
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய ஏர்டெல் திட்டங்கள்
1. ஏர்டெல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ.499 திட்டம்
இந்தத் திட்டம் ரூ.499க்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் கால் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் ஆகிய பலன்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் திட்டத்திற்கு இலவச ஆக்சஸ் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர விங்க் மியூஸிக் ஆக்சஸும் இலவசமாக பெற முடியும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
2. ஏர்டெல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ.599 திட்டம்
இந்தத் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்ஷன் உண்டு. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் பலன்கள் ஆகியவற்றுடன் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். அமேசான் பிரைம் வீடியோ மொபைல் திட்டத்திற்கு இலவச ஆக்சஸ், இலவச விங்க் மியூஸிக் ஆக்சஸ் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
3. ஏர்டெல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ.838 திட்டம்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்ஷன் இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இலவச வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பிரைம் வீடியோ மொபைல் திட்டத்திற்கு இலவச ஆக்சஸ், இலவச விங்க் மியூஸிக் ஆக்சஸ் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
4. ஏர்டெல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ.839 திட்டம்
இந்தத் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால், தினசரி 2 ஜிபி டேட்டா, ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பிரைம் வீடியோ மொபைல் திட்டத்திற்கு இலவச ஆக்சஸ், இலவச விங்க் மியூஸிக் ஆக்சஸ் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
5. ஏர்டெல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ.2,999 திட்டம்
இந்தத் திட்டத்தில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் வசதிகளும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சப்கிரிப்ஷன் ஆகியவையும் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் மொபைல் திட்டத்திற்கு இலவச ஆக்சஸ், விங்க் மியூஸிக் இலவச ஆக்சஸ் ஆகிய சேவைகளும் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
6. ஏர்டெல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ.3,359 திட்டம்
இதில் அனிலிமிடெட் கால் வசதி, தினசரி 2 ஜிபி டேட்டா ஆகியவற்றுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சப்கிரிப்ஷன் கிடைக்கும். அமேசான் பிரைம் மொபைல் திட்டத்திற்கு இலவச ஆக்சஸ், விங்க் மியூஸிக் இலவச ஆக்சஸ் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airtel, Hotstar, Recharge Plan