கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா லாக்டவுன் முடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இந்நிலையில் நடப்பு ஆண்டில் இந்தியாவில் லாக்டவுன் முற்றாக தளர்க்கப்பட்ட நிலையில், பொருளாதார குறியீடு குறித்த புள்ளி விவரங்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அதன் முக்கிய அலகாக வரிவசூல் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் நேரடி வரி வசூல் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரி வசூல் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, "டிசம்பர் 17, 2022, நிலவரப்படி நிகர வசூல் ரூ. 11,35,754 கோடி. இது முந்தைய ஆண்டின் ரூ. 9,47,959 கோடி நிகர வசூலை விட 19.81% அதிகமாகும்.
நிகர நேரடி வரி வசூல் ரூ. 11,35,754 கோடியில் (17.12.2022 நிலவரப்படி), கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 6,06,679 கோடி (திரும்பப் பெறுவதற்கான நிகரம்), தனிப்பட்ட வருமான வரி, பத்திர பரிவர்த்தனை வரி உட்பட ரூ. 5,26,477 கோடி ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 13,63,649 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 10,83,150 கோடி என்னும் முந்தைய நிதியாண்டின் வசூலை விட 25.90% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. மொத்த வசூல் ரூ. 13,63,649 கோடியில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 7,25,036 கோடி. தனிப்பட்ட வருமான வரி , பத்திர பரிவர்த்தனை வரி உட்பட ரூ. 6,35,920 கோடி." இவ்வாறு நிதியமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, FINANCE MINISTRY