ஹோம் /நியூஸ் /வணிகம் /

உலகக் கோப்பை கால்பந்து: டிவியை மிஞ்சிய டிஜிட்டல் பார்வையாளர்கள் - ஜியோ சினிமா அசத்தல் சாதனை

உலகக் கோப்பை கால்பந்து: டிவியை மிஞ்சிய டிஜிட்டல் பார்வையாளர்கள் - ஜியோ சினிமா அசத்தல் சாதனை

ஜியோ சினிமா

ஜியோ சினிமா

முதல் முறையாக டிவி பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் உலகக் கோப்பையில் கிடைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் கடந்த உலகக் கோப்பையின் சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த உலகக் கோப்பையை வென்று அர்ஜெண்டினா சாதனை படைத்தது போலவே, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ சினிமா டிஜிட்டல் தளம் உலகக் கோப்பை ஒளிபரப்பில் புதிய சாதனையை செய்துள்ளது. உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வு என்பது உலகக் கோப்பை கால்பந்து போட்டி விளையாட்டு உலகின் திருவிழாவாக கருதப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டிகளை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தார் சென்று பார்த்ததை போலலே, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியிலும், டிஜிட்டல் தளங்களிலும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ந்துள்ள இந்த யுகத்தில் டிவியை விட டிஜிட்டல் வடிவிலான ஒளிபரப்பு தளங்களுக்குத் தான் மவுசு அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி விளையாட்டு ஒளிபரப்பு நெட்வொர்க் ஆன நெட்வொர்க் 18 குழுமத்தின் Viacom18 ஸ்போர்ட்ஸ் பிபா உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலிலும், ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்திலும் ஒளிபரப்பு செய்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளி ஆகிய மொழிகள் ஜியோ சினிமா 4k தரத்தில் 64 போட்டிகளையும் வழங்கியுள்ளது.

செயலிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஆப் ஆனியின் தரவுகளின் படி கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட பொழுதுபோக்கு செயலிகளில் ஜியோ சினமா ஆப் முதலிடத்தைப் பிடித்துள்ளது. BARC அமைப்பின் தரவுகளின்படி, இறுதிப்போட்டியையும் சேர்த்து சுமார் 11 கோடி பார்வையாளர்கள் இந்த உலகக் கோப்பை போட்டிகளை கண்டுகளித்துள்ளனர்.இதன் மூலம் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளை விட அதிகம் பேர் இந்த உலகக் கோப்பையை கண்டுகளித்துள்ளனர்.

இதையும் படிங்க: 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை..! அசத்தும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்..!

மேலும், முதல் முறையாக டிவி பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் உலகக் கோப்பையில் கிடைத்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் கவரேஜும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாக உள்ளது. உலகக் கோப்பை முடிந்த கையோடு ஐபிஎல் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.இதை ஜியோ சினிமா ஒளிபரப்பு செய்கிறது.

First published:

Tags: Cinema 18, FIFA World Cup 2022, Jio, Reliance Digital, Reliance Jio