வங்கிகளில் நாள் கணக்கில் காத்திருந்து, கேட்கும் ஆவணங்களை எல்லாம் சமர்ப்பித்து கடன் பெறுவது என்பது மிகப்பெரிய வேலை. அதுவும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு மக்களுக்கு அதிகரித்த பணத்தேவையும், பணவீக்கமும் வங்கிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவும், கடன் வழங்குவதற்கான வழிமுறைகளை மேலும் கடினமாக மாற்றவும் வைத்துள்ளன. இதனை பயன்படுத்திக் கொண்ட சில பின்டெக் நிறுவனங்கள் மக்களின் அவசரத்தையும், பணத்தின் தேவையையும் வர்த்தகமாக மாற்றியுள்ளன. அப்படி ஃபின்டெக் நிறுவனங்கள் மூலமாக டிஜிட்டல் முறையில் அதிகம் கடன் வாங்குவோர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது.
ஃபின்டெக் அசோசியேஷன் ஃபார் கன்ஸ்யூமர் எம்பவர்மென்ட் (FACE) இன் அறிக்கையின்படி, 2021-2022 நிதியாண்டில் ஃபின்டெக் நிறுவனங்கள் கடன் வழங்குவதை இருமடங்காக உயர்த்தியதன் மூலமாக 2.66 கோடியாக இருந்த கடன் தொகை தற்போது 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
PM cares : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை!
FACE எனப்படும் நுகர்வோர் மேம்பாட்டிற்கான ஃபின்டெக் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள செக்புக் (Chqbook), எர்லி சேலரி (EarlySalary), கிஷ்ஷ்ட் (Kishsht), கிரெடிட்பீ (KreditBee), லோன் பிரண்ட் (LoanFront), லோன் டேப் (LoanTap), எம் பாக்கெட் (mPokket), பே யூ (PayU) மற்றும் பாக்கெட் (Phocket) ஆகிய 9 நிறுவனங்கள் பகிர்ந்த தரவுகளின் அடிப்படையில் கடன் வழங்கப்பட்டுள்ள விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வழங்கும் ஆப்களின் சந்தையாக தென்னிந்தியா திகழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
FIXED DEPOSIT : எந்த வங்கியில் பணத்தை போட்டால் லாபம் பார்க்கலாம்! முழு லிஸ்ட்
இந்த 9 ஃபின்டெக் ஆப்கள் மூலமாக வழங்கப்பட்ட டிஜிட்டல் கடன்களில் 44 சதவீதம் தென்னிந்தியாவுடையது ஆகும். 24 சதவீதம் மேற்கு பகுதியையும், 21 சதவீதம் வட இந்தியாவையும், மீதமுள்ள 10 சதவீதம் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலஙக்ளையும் குறிக்கிறது.
இந்திய அளவிலான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. இதன் கடன் பங்கு 16 சதவீதமாகவும், டிஜிட்டல் முறையில் அம்மாநில மக்கள் 2,880 கோடி ரூபாய் வரையில் கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் ஃபின்டெக் செயலிகள் மூலமாக டிஜிட்டல் கடன் பெறுவது உறுதியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 14 சதவீதம் பேர் டிஜிட்டல் முறையி 2,880 கோடி வரையில் கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவிற்கு அடுத்த இடத்தை தெலங்கானா பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக 10 சதவீதம் பேர் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு சற்றே தப்பித்துள்ளது. இங்கு ஃபின்டெக் ஆப் மற்றும் ஆன்லைன் மூலமாக 9 சதவீதம் பேர், அதாவது 1,620 கோடிக்கு கடன் பெற்றுள்ளனர். இதேபோல் ஆந்திராவில் டிஜிட்டல் முறையில் 9 சதவீதம் பேர் 1,620 கோடி ரூபாய் வரையிலும், தலைநகர் டெல்லியில் 6 சதவீதம் பேர் 1080 கோடி ரூபாய் வரையிலும் கடன் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.