ஹோம் /நியூஸ் /வணிகம் /

அசத்தும் டிஜிட்டல் பேமெண்ட்.. அதிகரிக்கும் பண்டிகைக் கால விற்பனை மற்றும் தேவை..

அசத்தும் டிஜிட்டல் பேமெண்ட்.. அதிகரிக்கும் பண்டிகைக் கால விற்பனை மற்றும் தேவை..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஷாப்பிங் சுலபமானதாக மாறியுள்ள நிலையில், மக்களின் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதனால் பண்டிகைக் கால விற்பனை கன ஜோராக நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதத்திற்கு ஏதேனும் சில பண்டிகைகள் வருகின்றன. ஒவ்வொரு பண்டிகையும் மதம், இனம், மொழி, நிலப்பரப்பு சார்ந்து கொண்டாடப்படுவதாக உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகையையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கொண்டாடுகின்றனர்.

இருப்பதிலேயே மிக அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படுவதாகவும், நீண்ட நாட்கள் உடையதாகவும் இருப்பது தசரா முதல் தீபாவளி வரையிலான பண்டிகைகள் தான். புத்தாடைகளை வாங்குவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்குவது, வெடி, வெடித்துக் கொண்டாடுவது, இனிப்புகளை பரிமாறிக் கொள்வது என்று இந்த பண்டிகைக்காலம் மிக கோலாகலமாக நடைபெறுகிறது.

பண்டிகைக்காலம் என்றதும் முன்பு பை நிறைய பணத்தை அள்ளி வைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்ற காலமும், அப்படி செல்லுகையில் பணத்தை தொலைப்பது அல்லது திருடர்களிடம் பணத்தை பறி கொடுப்பது போன்ற கொடுமைகளும் மெல்ல, மெல்ல மறைந்து விட்டன.

Read More : No Cost EMI – வட்டியில்லாமல் தவணை முறையில் பொருட்கள் வாங்குகிறீர்களா? இந்த தகவல் உங்களுக்கே!

இப்போது ஷாப்பிங் செல்பவர்கள் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளையே அதிகம் விரும்புகின்றனர். லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கினாலும் ஒவ்வொரு நோட்டாக எண்ணிக் கொண்டிருக்காமல், ஒரு நொடிப் பொழுதில் அந்தப் பணத்தை டிஜிட்டலில் செலுத்தி விடுகின்றனர்.

இன்னும் சிலர் ஷாப்பிங் செல்வதைக் கூட விரும்புவதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு ஆன்லைனில் ஆர்டர் போட்டுவிட்டு, அடுத்த வேலைகளை கவனிக்கப் போய் விடுகின்றனர். இப்படி மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை சௌகரியமாக மாற்றியிருப்பதில் டிஜிட்டலின் பங்கு மிக முக்கியமானது.

ஈஎம்ஐ, டிஜிட்டல் லோன், பை நவ் பே லேட்டர், யூபிஐ, நெட்பேங்கிங் என ஏதோ ஒரு முறையில் பணம் செலுத்துகின்றனர். ஆக, ஷாப்பிங் சுலபமானதாக மாறியுள்ள நிலையில், மக்களின் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதனால் பண்டிகைக் கால விற்பனை கன ஜோராக நடைபெறுகிறது.

டிஜிட்டல் வளர்ச்சி

டிஜிட்டல் பேமெண்ட் செக்யூரிட்டி நிறுவனமான விம்போ நிறுவனத்தின் அகில உலக தலைவர் சத்ருகன் சின்ஹா இதுகுறித்து கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஆண்டின் மற்ற காலத்தைக் காட்டிலும் விற்பனை அதிகமாக நடைபெறக் கூடிய பண்டிகைக் காலங்களில் இதை உணர முடிகிறது.

யூபிஐ, இண்டர்நெட் பேங்கிங், ஃபின்டெக் சேவைகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஷாப்பிங் செய்ய சுலபமாக இருக்கிறது என்பதுடன், அதில் கிடைக்கும் ஆஃபர்கள், கேஷ்பேக், டிஸ்கவுண்ட் போன்றவற்றுக்காகவும் இதனை விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய விருப்பம்

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. சுமார் 41 சதவீத மக்கள் பண்டிகைக் காலத்தில் டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். இதன் காரணமாக பண்டிகை கால விற்பனை மற்றும் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Deepavali, Digital Transaction, Diwali