அனைத்து பொது வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்குமே ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது டிஜிட்டல் மயமாக்கலில் சில நிமிடங்களிலேயே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்திற்கு ஏற்ற அளவு கடன் கிடைத்து விடுகிறது. இதற்கு ஆன்லைன், இணையதளங்கள், டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் வழியாக பல நிறுவனங்கள் இன்ஸ்டன்ட் லோன்களை வழங்கி வருகிறது.
டிஜிட்டல் கடன் வழங்கும் பல நிறுவனங்களும் எந்தவிதமான ஒழுங்குமுறைக்கு உட்படாமல் இயங்கி வருவதாக பலவித குற்றச்சாட்டுகள் சமீபத்தில் எழுந்துள்ளன. அதை ஒட்டி அனைத்து வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகம் செய்துள்ளது.
SBI : வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ வங்கி சேவைகளை பெறலாம்.. எப்படி தெரியுமா?
ஆன்லைனில் கடன் வழங்கும் அனைத்து சேவைகள் மற்றும் செயலிகளுமே ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம். இதன் மூலம் அதிகப்படியான வட்டி, முறையற்ற நிதி ரீதியான வணிகம், போலியான பரிவர்த்தனைகள், வாடிக்கையாளரிடம் தகாத முறையில் நடப்பது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, டேட்டா திருடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் வரும் எந்த நிதி நிறுவனங்களுமே, வங்கிகள் முதல் கோ-அப்பரேட்டிவ் வங்கிகள் வரை, லெண்டிங் சர்வீஸ் ப்ரோவைடர் அல்லது டிஜிட்டல் லெண்டிங் ஆப் ஆக செயல்படும்பொழுது, அல்லது அவற்றுடன் கடன் வழங்க ஈடுபடும் போது, கடமைகளில் இருந்து மீறக் கூடாது என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
ஒரு வங்கி தன்னுடைய மற்றொரு டிஜிட்டல் கடன் வழங்கும் செயலி வழியாகவோ அல்லது சேவை வழியாகவோ அவுட்சோர்ஸ் செய்தாலுமே இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேங்கில் அக்கவுண்ட் தொடங்க இனி ஆதார், பான் அவசியமில்லை.. வரப்போகிறது CKYC முறை!
அவ்வாறு ஒழுங்குமுறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், கடன் வழங்கும் செயலிகள் மற்றும் சேவைகள், பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
வருடாந்திர சதவீதம் (Annual Percentage Rate)
தற்போதைய புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளின் படி, கடன் வழங்குபவர்கள் APR என்று கூறப்படும் வருடாந்திர பர்சன்டேஜ் ரேட் பற்றி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். டிஜிட்டல் லோன் வாங்குபவர்களுக்கு வருடாந்திர விகிதம் என்பது மிகவும் ஒரு முக்கியமான கட்டணமாகும். பொதுவாக இந்த வருடாந்திர பர்சன்டேஜ் விகிதத்தில் நிதி வழங்குவதற்கான செலவு மற்றும் நிறுவனங்கள் பெறும் லாபம், கிரெடிட் செலவு மற்றும் அதன் செயல்படுத்துவதற்கான ஆப்ரேட்டிங் செலவு, ப்ராசசிங் கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், நிர்வகிப்புக் கட்டணம் உள்ளிட்டவை மட்டும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் இந்த விகிதத்தில் பீனல் கட்டணம், தாமதமாக செலுத்துவதற்கான கட்டணம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
நேரடி ரெமிட்டன்ஸ் மட்டுமே, மூன்றாம் தரப்பு கணக்கைத் தவிர்க்க வேண்டும்
கடன் வழங்கும் செயலி அல்லது சேவை, கடன் வாங்குபவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபரின் கணக்கில் செலுத்தக் கூடாது. அதே போல, கடன் வாங்கியவர், அதற்கான கட்டணம் மற்றும் மாதாந்திர ரீப்மென்ட் தொகையை வங்கி வழியாகவே, நேரடியாக செலுத்த வேண்டும். கடன் வழங்கிய சேவை அல்லாத மூன்றாம் நபர் கணக்கு வழியாக வரக்கூடாது.
டிஜிட்டல் கடன் வழங்குபவர்களுக்கு வங்கிகள் கட்டும் கட்டணங்களை கடன் வாங்குபவர்களிடம் வசூலிக்கக் கூடாது
வங்கிகள் லோன் சேவைகள் அல்லது செயலிகள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் பொழுது, லோன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் ஒரு சில கட்டணங்களை செலுத்த வேண்டும். வங்கிகள் செலுத்தும் கட்டணத்தை, வாடிக்கையாளரிடம் வசூலிக்கக் கூடாது.
கடன் வாங்கியவர் கடன் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது கடன் செலுத்தாமல் இருந்தாலோ, மாதாந்திர அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்த தவறினால் மட்டும்தான் அதனால் ஏற்படும் கட்டணம் அல்லது கூடுதல் வட்டியை தான் கடன் வழங்குபவர்கள் கட்ட வேண்டும். இதை தவிர்த்து வேறு எந்தவிதமான பீனல் கட்டணத்தையும் கடன் வழங்குபவர்கள் வாங்குபவர்கள் செலுத்த வேண்டாம்.
கூலிங் ஆஃப் அல்லது லாக்கிங் பீரியட்
கூலிங் ஆஃப் அல்லது லாக்கிங் பீரியட் என்பது வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள் ஆகும். அதாவது ஒரு காப்பீடு திட்டத்தை வாங்கும் போது அந்த காப்பீடு வாங்கிய நாளிலிருந்து பயன்படுத்த முடியாது, அதற்கு கூலிங் பீரியட் என்று ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அதேபோல இது போன்ற ஒரு கூலிங் பீரியட் அல்லது லாக் பீரியடை கடன் வாங்குபவர்களுக்கு வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது கடன் வேண்டாம் என்று கூறவோ அவர்களுக்கு கால அளவை ஒதுக்க வேண்டும்.
டேட்டா பாதுகாப்பு
இதைத் தவிர்த்து யூசர்களின் கடன் வாங்குபவர்களின் எந்தவிதமான பர்சனல் தகவல்கள் மற்றும் தரவுகளையும் பயன்படுத்தக் கூடாது. யூசர்களின் தனிப்பட்ட தரவுகளை சேமித்து பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு யூசரின் ஒப்புதலும் தேவை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Loan, Loan app, Reserve Bank of India