பல ஆண்டுகளாக தங்கம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. மக்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம். குறிப்பாக இந்தியாவில், தங்கத்தின் மீது மக்கள் காலங்காலமாக அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் தங்கம் அவர்களின் நம்பிக்கையுடன் வலுவாக நிற்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தங்கம் எப்போதும் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்புத் திறனை நிரூபித்துள்ளது.
விக்னஹர்டா கோல்ட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர லூனியா, டிஜிட்டல் தங்க முதலீடு மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் போடுவதற்கு முன் சிலவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பதிவில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் மிக கவனமாக செயல்படுவதற்கு உதவும் வகையில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளோம்.
ஒரு முதலீட்டாளர் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதை விளக்கிய மகேந்திர லூனியா, “எப்போதும் ஈக்விட்டியை நோக்கி ஒரு பெரிய ஒதுக்கீட்டைக் கொண்டிருக்க வேண்டும், அதேசமயம் ஒருவர் தங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவு ஒதுக்கீட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாதகமான சந்தை சூழ்நிலைகளில், தங்கத்திற்கு குறைந்தபட்சம் 7-15% ஒதுக்கீடு இருக்க வேண்டும். மேலும் பல பாதகமான நேரங்களை எதிர்கொள்ளும் போது தங்கத்தின் செயல்திறன் கீழ் பக்க பாதுகாப்பை அளிக்கிறது.
முதலீடு செய்வோருக்கான ஆலோசனைகள் தங்க பத்திரங்களை ஆன்லைனில் எந்த நேரத்திலும் ஒருவர் புழக்கத்துடன் வைக்க முடியும். அதேசமயம் இதை செய்வதற்கு சில நேரம் எடுத்து கொள்ளும். தங்க பத்திரங்களில் முதலீடு செய்தால் அவற்றிற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. அதேசமயம் அதை பொருளாக வாங்கும் போது 3% ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதை பலரும் தெளிவாக அறிந்து வைத்து கொள்வது முக்கியம்.
Also Read : கடனுக்கான EMI-யை தவறவிட்டால் என்னென்ன ஆபத்துக்கள் நடக்கும் தெரியுமா?
தங்க பத்திரங்களில் சாத்தியமான விலை அதிகரிப்புடன், இது முதலீட்டாளருக்கு வழக்கமான வரவை அளிக்கிறது. மேலும் இது பல நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வரவையும் தரக்கூடும். பலருக்கும் தங்கத்தின் தூய்மை ஒரு முக்கிய கவலையாக உள்ளது, ஆனால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதால் இந்த கவலை பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று லுனியா அவர்கள் தெரிவித்தார்.
Also Read : வித்தியாசமான வேலைகளைச் செய்து மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் லண்டன் பெண்... எப்படித் தெரியுமா?
மேலும், நீண்ட கால முதலீட்டாளர் டிஜிட்டல் தங்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்த தனது பார்வையையும் பகிர்ந்து கொண்டார். “ஒரு முதலீட்டாளர் நீண்ட காலத்திற்கு தங்கத்தில் முறையான முதலீட்டுத் திட்டத்தின் (SIP) கீழ் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 3% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும், இதுவே தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்த ஜி.எஸ்.டி பணத்தை சேமித்து கொள்ளலாம். தங்க பத்திரத்தின் முதிர்வு காலம் வரை அதை வைத்திருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும், மேலும் இது மிகவும் பல வகையில் லாபத்தை தரும் என்று லுனியா கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold, Investment