• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரூ.100ஐ தொட்டது டீசல் விலை.. பெட்ரோல் விலை இன்றும் (அக்டோபர் 23) ஏறுமுகம்!

ரூ.100ஐ தொட்டது டீசல் விலை.. பெட்ரோல் விலை இன்றும் (அக்டோபர் 23) ஏறுமுகம்!

Petrol diesel price

Petrol diesel price

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக டீசல் விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் ஏறுமுகத்திலேயே உள்ளது. சென்னையில் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து இன்று 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பெட்ரோல் விலை 107 ரூபாயை கடந்துள்ளது, மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 113 ரூபாயை நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயிக்கும் முறையை கடைப்பிடித்து வரும் நிலையில் இந்த விலை ஏற்றம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிரித்து, லிட்டர் ஒன்றின் விலை 104.22 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை கடந்த 19ம் தேதி 15 காசுகள் அதிகரித்து 103.16 ரூபாயாக இருந்தது, கடந்த 20ம் தேதி 15 காசுகள் அதிகரித்து 103.31 ரூபாயாக இருந்தது, 21ம் தேதி 40 காசுகள் உயர்ந்து 103.71 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read:  கொரோனா விதிமுறையை பின்பற்றாத பிரபல ஜவுளிக்கடைக்கு சீல்.. நகராட்சி அதிகாரிகளை தாக்க முயன்ற கடை உரிமையாளர்!!

சதமடித்த டீசல் விலை:

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக டீசல் விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களாகவே பெரிய அளவில் டீசல் விலை ஏற்றம் இல்லை என்ற போதிலும், சிறிது சிறிதாக உயர்ந்து இன்று டீசல் லிட்டர் ஒன்றில் விலை 100.25 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Also read: மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவது பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக அத்யாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: