• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்கள் PF Account-ல் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?

உங்கள் PF Account-ல் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?

EPF, EPS இரண்டும் வருங்காலத்திற்கான சேமிப்பு. ஆனால் EDLI பிஎப் கணக்கு சந்தாதாருக்கு அளிக்கப்படும் ஒரு லைப் இன்சூரன்ஸ் திட்டமாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் பலருக்கும் ஓய்வூதிய காலத்திற்கு மிகவும் உதவக் கூடியது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி. தொழிலாளர்கள் சம்பளத்தில் பி.எஃப். பிடிக்கும் போது ஓய்வு காலம் குறித்துக் கவலையின்றி வாழலாம்.

    வருங்கால வைப்பு நிதி ஆணையம் கீழ் வழங்கப்பட்டு வரும் பி.எஃப் கணக்கில் EPF, EPS மற்றும் EDLI என்று மூன்று சேமிப்புகள் உள்ளன. EPF, EPS இரண்டும் வருங்காலத்திற்கான சேமிப்பு. ஆனால் EDLI பிஎஃப் கணக்கு சந்தாதாருக்கு அளிக்கப்படும் ஒரு லைஃப் இன்சூரன்ஸ் திட்டமாகும்.

    EDLI என்றால் என்ன?


    1976-ம் ஆண்டு EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்) அறிமுகம் செய்யப்பட்டது. EPF பயனர்கள் அனைவருக்கும் EDLI திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்.

    EDLI-ஐ பெறுவது எப்படி?


    EDLI திட்டத்தைத் தனியாக எல்லாம் கட்டணம் செலுத்திப் பெற முடியாது. EPF கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் EDLI திட்ட நன்மையும் சேர்ந்து கிடைக்கும்.

    EDLI திட்ட பங்களிப்பு எவ்வளவு?


    பொதுவாக EPF கணக்கிற்கு ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்படும். பின்னர் நிறுவனம் EPS ஆக 8.33 சதவீதமும், EDLI ஆக 0.50% அல்லது அதிகபட்சமாக 75 ரூபாய் வரையிலும், EPF ஆக 3.67 சதவீத பங்களிப்பும் அளிக்கும். ஊழியர்கள் சம்பளத்திலிருந்து இதற்குப் பிடித்தம் ஏதும் செய்ய முடியாது.

    EDLI கீழ் எவ்வளவு காப்பீடு கிடைக்கும்?


    EDLI காப்பீட்டை பெற முயல்பவர்களுக்கு 30 மடங்கு சம்பளம் காப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். மேலும் 1.50 லட்சம் ரூபாய் போனஸ் தொகை பெற கூடிய நன்மையும் உள்ளது.

    உதாரணம்


    X என்பவருக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் EPF, EPS மற்றும் EDLI போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. X-ன் மாத சம்பளம் (அடிப்படை + அகவிலைப்படி) 15,000 ரூபாய். X பணியில் ஆக்டிவாக இருக்கும் போது இறக்க நேர்ந்தால் நாமினி EDLI பாலிசியைக் கிளைம் செய்யும் போது (30 x Rs 15,000) + (Rs 1,50,000) என 6 லட்சம் ரூபாயைப் பெற முடியும்.

    EDLI காப்பீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி?


    EDLI பணத்தை நாமினியால் (வாரிசு, மனைவி, பெற்றோர்) மட்டுமே திரும்பப் பெற முடியும். ஒருவேலை நாமினி இறந்துவிட்டால் அவர்களது பிள்ளைகளால் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். பிஎஃப் சந்தாதார் இறக்கும் வரை வேலை பார்த்து வரும் ஊழியர்களின் நாமினிகளுக்கு மட்டுமே இந்தக் காப்பீட்டு தொகை கிடைக்கும். தொடர்ந்து வேலையில் இல்லாத போது இடையில் இறக்கும் போது EDLI காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது.

    தேவையான ஆவணங்கள்


    EDLI காப்பீட்டைப் பெற EPF சந்தாதாரின் இறப்புச் சான்றிதழ், நாமினி மையனராக இருக்கும் போது பாதுகாவலர் நிலை சான்றிதழ், சட்டப்பூர்வமான நாமினி என்பதற்கு வாரிசு சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் பார்க்க: விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவேன்... 6 வயது சிறுவன் சபதம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: