ஹோம் /நியூஸ் /வணிகம் /

பட்ஜெட் 2021: நகைகள் மீதான இறக்குமதி வரி குறையுமா?

பட்ஜெட் 2021: நகைகள் மீதான இறக்குமதி வரி குறையுமா?

தங்க நகைகள்

தங்க நகைகள்

இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், சட்டவிரோத தங்கக் கடத்தல் குறையும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், தங்கக் கடத்தலை தடுக்க அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

2021 -22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Budget 2021) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். முதன் முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். எல்லா துறைகளைப் போன்றும் ஆபரணத்துறையும் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், சட்டவிரோத தங்கக் கடத்தல் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிகப்படியான இறக்குமதி வரி காரணமாக சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரிப்பதாகவும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் செட்டில்மென்ட் தொகை நிலுவையில் இருப்பதாக சூரத் வரத்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய GJEPC அமைப்பின் தலைவர் தினேஷ் நவாடியா, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு திரும்ப கொடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைகளை திரும்ப கொடுப்பது குறித்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஜி.எஸ்.டி மூலம் ஈட்டப்படும் வருவாயை சரியாக பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், ஆபரணத்துறையில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரிகளைக்கொண்டு வைரத்துறையை மேம்படுத்துவதற்கான TUF திட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நவாடியா கோரிக்கை வைத்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் மெருகூட்டப்பட்ட கற்களுக்கு விதிக்கப்படும் 7.5 விழுக்காடு வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது இந்தியாவில் வைர பாலிஷ் தொழிலில் ஈடுபடும் வைர வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ள நவாடியா, தற்போதைய கட்டமைப்புகள் தரத்தை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை எனத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு சுரங்கத் தொழிலாளர்கள் கொண்டுவரும் மாதிரி கற்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என நவாடியா வலியுறுத்தியுள்ளார்.

விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என GJEPC அமைப்பு ஏற்கனவே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சீனா, ஹாங்காங், அமெரிக்காவில் நிலவும் பதற்றமான சூழல் இந்திய நகைத்துறைக்கு நல்ல வாய்ப்பாக இருப்பதாகவும், அதிகப்படியான இறக்குமதி காரணமாக இந்த சூழல்நிலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் நவாடியா தெரிவித்தார்.

பட்ஜெட்டில் இறக்குமதி வரியை 12.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்க ஜி.ஜே.இ.பி.சி ஏற்கனவே அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு இடையிலான வர்த்தக பதட்டங்கள் மற்றும் இடையூறுகள் காரணமாக, சர்வதேச நகைக் கோரிக்கை இந்தியாவுக்குத் திரும்புகிறது, ஆனால் தங்கக்கட்டிகளில் அதிக இறக்குமதி வரியால் உலகளாவிய சந்தையில் போட்டியிடுவது கடினம் என்று நவாடியா கூறினார்.

தங்கக் கடத்தல்;

இறக்குமதி வரி காரணமாக நாட்டில் தங்கக் கடத்தல் அதிகரித்திருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வருவாய் புலனாய்வு அமைப்பு 2019 -20 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பில், ஆயிரம் டன் தங்கம் நுகர்வு இருந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால், பதிவுகளின் படி 800 டன் தங்கம் மட்டுமே இறக்குமதியாகி உள்ளது. இந்த வேறுபாட்டை கணக்கிடும்போது ஆண்டுக்கு 150 முதல் 200 டன் தங்கம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவதாக தெரிவித்துள்ள நகை வியாபாரிகள், இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், இறக்குமதி வரியை குறைத்தால், தங்கக் கடத்தலும் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 50 ஆயிரம் ரூபாய் வரை சந்தையில் தங்கம் விற்பனையாவதால், சட்டவிரோத தங்க கடத்தலில் ஈடுபடுவோருக்கு இது லாபகரமான தொழிலாக இருப்பதாகவும் வருவாய் புலனாய்வு அறிக்கை கூறியுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Budget 2021, Nirmala Sitharaman