Home /News /business /

செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள விலைவாசி மாற்றங்கள் - சாமானிய மக்களுக்குப் பாதிப்பு உண்டா?

செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள விலைவாசி மாற்றங்கள் - சாமானிய மக்களுக்குப் பாதிப்பு உண்டா?

செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள விலைவாசி மாற்றங்கள்

செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள விலைவாசி மாற்றங்கள்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாறும் விலைவாசி. இதனைத் தெரிந்து வைத்துக் கொண்டு இந்த மாதம் பட்ஜெட் போடுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாதந்தோறும் நம் வருமானத்திற்கு ஏற்ப பட்ஜெட் போட்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது நல்ல பலனைத் தரும். ஆனால், நாம் ஒன்று நினைக்க, நடப்பது வேறாக இருக்கும். குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் விலைவாசி எவ்வளவு தூரம் மாற்றம் அடைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு பட்ஜெட் போட வேண்டும். சில சமயம், விலைவாசி மாற்றங்கள் நமக்குப் பயனுள்ள வகையிலும் அமையும்.

    அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன விலைவாசி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறித்தும், அதன் மூலமாக நமக்குப் பலன் கிடைத்துள்ளதா என்பது குறித்தும் இந்தச் செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

    இன்சூரன்ஸ் முகவர் கமிஷன் தொகை குறைப்பு:

    பொது காப்பீட்டுத் திட்டங்களின் முகவர்கள் சராசரியாக 30 முதல் 35 சதவீதம் வரையிலும் கமிஷன் பெற்று வந்த நிலையில், தற்போது அதை 20 சதவீதமாக ஐஆர்டிஏஐ அமைப்பு மாற்றி அமைத்துள்ளது. இது காப்பீட்டு நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பாகும். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறையின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு நேரடி பலன் உண்டு. அதாவது, காப்பீடுகளுக்கு இனி நீங்கள் செலுத்தக் கூடிய ப்ரீமியத் தொகை குறையும்.

    சிலிண்டர் விலை மாற்றம்:

    செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட உள்ளது என்று பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், விலை அதிகரிக்கப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், விலை மாற்றம் உண்டு.

    பிஎன்பி கேஒய்சி அப்டேட்:

    ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்களின் கேஒய்சி ஆவணங்களை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவுறுத்தி இருந்தது. ஆனால், இதைச் செய்யாத வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவர்களால் பணம் எடுக்க முடியாது.

    யமுனா நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் அதிகரிப்பு:

    நாட்டின் தலைநகரான டெல்லிக்கு யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாகப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பஸ், கார், ஜீப், வேன் என ஒவ்வொரு வாகனங்களுக்கும் தகுந்தாற்போல கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    Also Read : தமிழகம், மத்திய பிரதேசத்தில் கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி!

    ஆடி கார் விலை உயர்வு:

    கார் பிரியர்களின் கனவுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆடி கார்களின் விலை இந்தியாவில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய விலை உயர்வு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம்:

    நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்குப் பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3 தவணைகளாக மொத்தம் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் தங்களுடைய கேஒய்சி அப்டேட்டுகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னதாக செய்திருக்க வேண்டும். தவறியவர்களுக்கு அடுத்த தவணைப் பணம் வரவு வைக்கப்படாது.

    வீட்டு மனை விலை உயர்வு:

    வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் கூட வீட்டு மனைகள் விலை உயர்ந்துள்ளன. தங்களின் சொந்த ஊரிலேயே வீடு வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Gas Cylinder Price, Hiked price, September

    அடுத்த செய்தி