Home /News /business /

தடைக்கு பிறகும் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் டிக் டாக்!

தடைக்கு பிறகும் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் டிக் டாக்!

டிக் டாக்

டிக் டாக்

இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலை தருவதாக இருந்தாலும் நம்பிக்கை உள்ளது.

  • News18
  • Last Updated :
டிக் டாக் செயலியை மத்திய அரசு தடை செய்துள்ள போதிலும் , இந்தியாவில் ஏழாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டிக் டாக் செயலி கடந்த வாரம் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான BYTE Dance, இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏழாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலை தருவதாக இருந்தாலும் விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என அந்நிறுவனம் நம்பிக்கையுடன் கூறியுள்ளது.

மேலும் ஆயிரம் இந்திய ஊழியர்களை பணியில் நியமிக்கவும் முடிவெடுத்திருப்பதாக Byte Dance நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Investment, Tik Tok

அடுத்த செய்தி