முகப்பு /செய்தி /வணிகம் / எங்கள் நிறுவனத்தை அமேசான் அழிக்கப் பார்க்கிறது: ஃபியூச்சர் குழும நிறுவனர் பையானி வேதனை

எங்கள் நிறுவனத்தை அமேசான் அழிக்கப் பார்க்கிறது: ஃபியூச்சர் குழும நிறுவனர் பையானி வேதனை

கிஷோர் பையானி

கிஷோர் பையானி

கடந்த ஜூன் மாதத்தில் ஃபியூச்சர் ரீடெய்லின் கடன் சுமை ரூ. 11,250 கோடியாக அதிகரிக்க வங்கிகள் மற்றும் கடனாளர்களிடமிருந்து கடும் நெருக்கடி ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஃபியூச்சர் குழுமம் என்ற தங்கள் குழுமத்தைக் காப்பாற்றுமாறு அமேசானைக் கேட்டுக் கொண்டோம் ஆனால் அமேசான் உதவ முன்வரவில்லை, உதவவில்லை என்பதோடு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தை வாங்கும் முயற்சியையும் தடுத்து வருகிறது அமேசான் என்று ஃபியூச்சர் குழுமத்தின் நிறுவனர் கிஷோர் பையானி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கிஷோர் பையானி, ‘அமேசான் தங்கள் நிறுவனம் அழியட்டும்’ என்று கருதுகின்றனர் என்றார்.

நேர்காணல் ஒன்றில் கிஷோர் பையானி கூறும்போது, “ஃபியூச்சர் நிறுவனத்தின் நிதிநெருக்கடிகள் பற்றி அமேசானிடம் 8 முறை தெரிவித்து விட்டோம் ஆனால் அமேசான் உதவ முன்வரவில்லை. எங்களுக்கும் அமேசானுக்கும் இடையேயான் ஒப்பந்தத்தின் படி நிதி நிறுவனங்கள் மூலம் நிதியளிக்க முடியும் அல்லது ஏற்கெனவே கடன் அளித்தவர்களின் தொகையை தங்கள் பொறுப்பின் கீழ் கொண்டு வர முடியும். ஆனால் அமேசான் உதவ முன்வரவில்லை” என்றார்.

ஃபியூச்சர் குழுமத்தின் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களையும் ரிலையன்ஸுக்கு ரூ.25,000 கோடிக்கு விற்பனை செய்ய ஆகஸ்டிலேயே ஒப்புக் கொண்டதாக பையானி அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

ஆனால் அமேசான் இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் முறையீடு செய்து ரிலையன்ஸ்-பியூச்சர் நடவடிக்கைகளை நிறுத்தச் செய்தது.

அமேசான் கூறுவதென்னவெனில் ஃபியூச்சர் குழுமம் ஒப்பந்த மீறல் செய்தது என்கிறது.

பையானி மேலும் கூறுகையில், “நாங்கள் 4-5 முதலீட்டாளர்களையும் அவர்களுக்கு பரிந்துரைத்தோம் ஆனால் எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அமேசான் முன் வரவில்லை, எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை, வெறும் வாய்வார்த்தையைத் தவிர அமேசானிடமிருந்து ஒன்றுமில்லை. அமேசானின் நோக்கம் என்ன? ஃபியூச்சர் குழும ஊழியர்கள், சப்ளையர்கள், விற்பனையாளர்கள், கடன் அளித்தவர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும், எங்கள் நிறுவனம் அழியட்டும் என்பதுதானே?

இந்நிலையில்தான் ரிலையன்ஸை அணுகி நிறுவனத்தை வாங்க பேச்சு வார்த்தை நடத்தினோம், அமேசானிடமும் இதை தெரிவித்த போது அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை” என்றார் பையானி.

ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தினிடம் அமேசான் 5% முதலீடு வைத்துள்ளது.

விட்சிக் அட்வைசரி சர்வீசஸ் நிறுவனத்திடமும் பையானி ஃபியூச்சர் குழுமம் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்தினார். மேலும் அமேசானின் 3 வழி கூட்டுறவு வைத்துள்ள சமாரா கேப்பிடல் நிறுவனத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனாலும் உதவவில்லை. ஃபியூச்சர் பங்குகளின் விலை ஒரே மாதத்தில் 70% குறைந்தது.

“அவர்கள் பங்குகளை வாங்க உரிமை படைத்தவர்களே. ஆனால் புரோமோட்டர்களின் பங்குகள் பற்றி பேச்சு எழுந்தவுடனேயே அவர்கள் எங்களுக்கு உதவி கடன்களை தீர்த்திருக்க முடியும். இந்நிலையில்தான் ரிலையன்ஸ் எங்களைக் காப்பாற்றும் மீட்பராக முன் வந்தது.

இந்த ஒப்பந்தத்தினால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பைசா கூட லாபம் இல்லை. மாறாக நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ரீடெய்ல் நிறுவனங்களை நான் இழந்ததுதான் மிச்சம். தகராறு இருக்கிறது என்றால் அமேசானுக்கும் புரோமோட்டர்களுக்கும்தானே தவிர இதில் எங்களின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் இழுத்து விட்டது ஏன்? இந்த நிறுவனங்களில் அமேசானுக்கு எந்த வித உரிமையும் இல்லை” என்கிறார் பையானி.

கடந்த ஜூன் மாதத்தில் ஃபியூச்சர் ரீடெய்லின் கடன் சுமை ரூ. 11,250 கோடியாக அதிகரிக்க வங்கிகள் மற்றும் கடனாளர்களிடமிருந்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. நிறுவனத்தை மறுகட்டுமானம் செய்ய பலத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனால்தான் ரிலையன்ஸை நாடியது ஃபியூச்சர் நிறுவனம்.

இந்நிலையில்தான் அமேசான் நிறுவனம் ஃபியூச்சர்- ரிலையன்ஸ் உடன்படிக்கையை நிறுத்த சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டில் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் பங்குதாரர்களையும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பையும் ஏமாற்றப்பார்க்கிறது என்ற அமேசான் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கருத்துகளையும் சுட்டிக்காட்டியது. ஆனால் நீதிமன்றம் ரிலையன்ஸ்-ஃபியூச்சர் உடன்படிக்கை சட்டப்பூர்வமானது என்று கூறியதாக பியூச்சர் வலியுறுத்தியது. இப்போதைக்கு சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் மன்றம் கடைசி உத்தரவு வரும் வரை ரிலையன்ஸுடனான பியூச்சரின் உடன்படிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்தான் ஃபியூச்சர் நிறுவனர் கிஷோர் பையானி அமேசான் தங்களை அழிக்கப்பார்க்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Future Group, Reliance Retail